மன அழுத்தம் குறைக்க..! மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் செயல்கள்..!
-
மன அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்த ஒன்று தியானம் தான்.ஒரு நாளில் குறைந்தது 10 நிமிடமாவது தியானத்தில் ஈடுபட வேண்டும்.
-
உங்களுக்கு பிடித்த நபரை சந்தித்து பேசுவது, செல்போனில் பேசுவது போன்ற எதாவதொரு செயலை செய்து உங்கள் மனதில் இருக்கும் கவலையை அவர்களிடம் பகிர்ந்தால் அக்கவலை குறைந்து மனதில் உள்ள அழுத்தம் குறையும்.
-
அமைதியுடன் தொடர்புடைய லாவண்டர், சந்தனம், சாமந்தி ஆகிய வாசனைகளை நுகரலாம். குளிக்கும் நீரில் கலந்து குளிக்கலாம்.
-
உங்களுக்கு பிடித்தமான இசைகருவிகள் வாசிப்பது, ஓவியம் வரைவது, கைவிணை பொருட்களை செய்வது என ஏதாவது ஒன்றை செய்யலாம்.
-
மனம் அமைதி அடைய ஆழ்ந்த சுவாச பயிற்சியில் ஈடுபடலாம். இது மன அழுத்தத்தை குறைக்கும்.
-
சிரிப்பு யோகா பயிற்சியும் இதற்கு நல்ல தீர்வாக இருக்கும்.
-
செல்லபிராணிகள் வளர்ப்பது, குறிப்பாக நாய் வளர்த்தால் அதனுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள், இதனால் மன அழுத்தத்தை தரும் ஹார்மோன்களை குறைத்து மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது.
-
சமூக ஊடகங்கள் போன்ற டிஜிட்டல் திரையில் அதிக நேரத்தை செலவிட்டால் அது மன அழுத்தத்தை தரும். எனவே அதனை ஒதுக்கி வைத்துவிட்டு மகிழ்ச்சியானவற்றை செய்யுங்கள்.
-
தோட்டக்கலைகளில் ஈடுபடலாம். செடி வளர்ப்பது, அறுவடை செய்வது போன்றவை தியானத்திற்கு இணையான அமைதியை தரும்.