ADVERTISEMENT
40 வயதிலும் 20 வயது போல் ஜொலிக்க…! இதை ட்ரைப் பண்ணுங்க..!
சிவப்பு குடைமிளகாய்:
சிவப்பு குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளது.இது கொலாஜன் உற்ப்பத்தியை அதிகரிக்கிறது.மேலும் ஆன்டி ஆக்சிடென்டான கரோட்டினாய்டுகள் பெற்றுள்ளது.
சருமத்திற்கு கேடு விளைவிக்கும் ரேடிகல்களை அழிக்கிறது, சூரிய கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது.
பப்பாளி:
பப்பாளி பழம் வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் ஈ, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகிய ஊட்டச்சத்துக்களை பெற்றுள்ளது. சருமத்திற்கு கேடு விளைவிக்கும் ரேடிகல்களை எதிர்த்து போராடுகிறது.
வயதாகும் தோற்றத்தை தாமதப்படுத்துகிறது.
ப்ளூபெர்ரி:
ப்ளூபெர்ரியில் வைட்டமின்கள், தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது. சூரிய ஒளி மற்றும் மன அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கும் அந்தோசயனின் எனப்படும் ஆன்டி ஆக்சிடென்களை பெற்றுள்ளது.
பொலிவான சருமத்தை தக்க வைக்க உதவுகிறது.
புரோக்கோலி:
புரோக்கோலியில் வைட்டமின் சி, கே, நார்ச்சத்து, போலேட், லுடீன், கால்சியம் ஆகிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை ஊக்குவிக்கிறது.
அவகேடோ:
அவகேடோ பழத்தில் வைட்டமின் ஏ அதிகமாக காணப்படுகிறது. இது இறந்த சரும செல்களை அகற்றி மென்மையான மற்றும் இளமையான சருமத்தை தக்க வைக்கிறது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)