இல்லத்தரசிகளுக்கு ஏற்ப பயனுள்ள தகவல்கள்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- தக்காளி சீக்கிரமாக வதங்கி தக்காளியில் உப்பு சேர்த்து வதக்கி பின் சிறிது சர்க்கரை சேர்த்து வதக்க வேண்டும்.
- சேப்பங்கிழங்கை வேகவைக்கும் முன் கத்தியால் சிறிது கீறி பின் வேகவைக்க தோல் ஈசியாக வரும்.
- எலுமிச்சை தோல்லை தூக்கி போடாமல் பீங்கான் பாத்திரத்தில் படிந்த கறையை நீக்க பயன்படுத்தலாம்.
- ரவா லட்டு செய்யும்போது சிறிது பால் பவுடர் சேர்த்து செய்தால் சுவை அதிகமாக இருக்கும்.
- மொச்சையில் அதிக அளவில் ஊட்டச்சத்து இருப்பதால் கர்பிணி பெண்களுக்கு இதை கொடுக்கலாம்.
- உடைத்து ஊற்றி செய்த முட்டை குழம்பில் கடைசியாக தேங்காய் மற்றும் சோம்பு அரைத்த கலவையை சேர்க்க சூப்பராக இருக்கும்.
- வத்த குழம்பில் கத்தரி, கொத்தவரங்காய், அவரை ஆகிய வத்தல்களை சூடான நீரில் ஊறவைத்து பின் குழம்பில் சேர்க்க சீக்கிரம் வெந்துவிடும்.
- முட்டைகளை வேகவைக்கும்போது சிறிது வினிகர் சேர்த்து வேகவைக்க விரிசல் விழாமல் முட்டை முழுவதுமாக கிடைக்கும்.
- வெண்ணய் காய்ச்சி இறக்கும்போது சிறிது வெந்தயப்பொடி சேர்த்து இறக்கினால் நெய் நல்லா மணமாக இருக்கும்.
- கடலை எண்ணெய் கெடாமல் இருக்க அதில் சிறிது புளி சேர்த்து வைக்க நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
- போண்டா, வடை, பஜ்ஜி செய்யும்போது மாவினை சிறிது நேரம் பிரிஜ்ஜில் வைத்து பின் சுட்டால் பலகாரம் செய்யும்போது ஒட்டாமல் இருக்கும்.
- வடகத்தை முதலில் வெறும் வாணலில் சூடு செய்து பின் எண்ணெயில் சேர்த்து பொரிக்க நல்லா மணமாக இருக்கும்.