அதிதி ராவை இன்று கரம் பிடித்த சித்தார்த்..!
நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஆகியோரும் அதிதி ராவுக்கு சொந்தமான வனபர்த்தி கோவிலில் இன்று அதிகாலை திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.
சித்தார்த் அவர்கள் தங்களுடைய நிச்சயதார்த்தை போலவே இன்று திருமணத்தையும் பிரபலங்கள் யாரையும் அழைக்காமல் எளிமையாக நடித்தி முடித்துள்ளனர்.
தெலுங்கானாவில் உள்ள வனபர்த்தி கோவிலில் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஆகியோருக்கு கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இன்று அதே கோவிலில் இருவருக்கும் திருமணம் மிக எளிமையான முறையில் நடந்து முடிந்தது.
சித்தார்த் அவர்கள் வெள்ளை வேட்டி சட்டையுடனும் அதிதி அவர்கள் வெள்ளை மற்றும் சந்தன கலரில் புடவையும் அணிந்தபடி எளிமையான முறையில் திருமணத்தௌ நடத்தி இருக்கிறார்கள்.
அதிதி ராவ் அவர்கள் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் நீயே என் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லம் என கவிதை வரிகளையும் திருமண புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
தற்போது திருமணம் செய்து கொண்ட நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஆகிய இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிதியின் தாத்தா வனபர்த்தி சமஸ்தானத்தின் கடைசி அரசர் ஆவார். இதனால் அவர்களுக்கு சொந்தமான வனபர்த்தியில் உள்ள ஸ்ரீரங்கநாயக சுவாமி கோவிலில் அவர்களின் திருமணம் எளிமையான முறையில் இன்று நிறைவு பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டில் சித்தார்த்தின் படம் சித்தா வெளியாகி ரகிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றது. தற்போது சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஆகியோரின் புதிய வாழ்க்கை சிறப்பாக அமைய அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.