இந்திய அணியின் தற்போதைய கேப்டனும் நட்சத்திர வீரருமான ரோஹித் ஷர்மாவிற்கு இந்த வருடம் ,மிகவும் கடினமான வருடமாகவே இருந்துள்ளது. அவருடைய இந்த ஆண்டு இந்தியா அணியின் கேப்டனாகவும் ஐபிஎல் கேப்டனாகவும் அவர் நினைத்த படி அணியை வழிநடத்த முடியவில்லை.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஐபிஎல் லில் அதிக கோப்பைகளை கொண்ட கேப்டனான ரோஹித் சர்மா கடந்த ஆண்டு இந்தியா அணியின் அணைத்து போர்மட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதற்கு முன் வரை அவர் நினைத்த படி இருந்த அவரது கேப்டன்ஷிப் அவர் இந்தியா வின் கேப்டன் ஆனா பின் அவருக்கு சோதனை ஆரம்பித்து என்றுதான் கூற வேண்டும். இந்த ஆண்டு இந்தியாவில் நடந்த ஐபிஎல் தொடரில் தொடங்கி டி20 உலகக்கோப்பை வரை அவருக்கு ஏதுவாக செல்லவில்லை.
மிகவும் சிறப்பாக விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த வருடம் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. அதற்கு முக்கிய காரணமாக அவரின் அணியின் விளையாட்டு வீரர்களின் தேர்வுதான் என்ற விவாதமும் அங்கங்கே எழுந்தது. அதே போன்றுதான் முதல் முறை கேப்டனாக அவருடைய தலைமையில் பல எதிர்பார்ப்புகளுடன் ஆஸ்திரேலியா டி 20 உலகக்கோப்பையை தொடங்கியது. ஆனால் அரையிறுதி போட்டியில் படு மோசமான தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
இது மட்டுமில்லாமல் ஒரு பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மா மிகவும் மோசமாக சொதப்பியுள்ளார். இந்த ஒரு நாடு முழுவதும் ஒரு சத்தை கூட அவர் பதிவு செய்யவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அவரின் பழைய பார்ம்க்கு விரைவில் மீண்டு வர வேண்டிய காட்டாயத்தில் அவர் உள்ளார். இப்பொழுது அடுத்த டி20 கேப்டனை மாற்ற வேண்டும் என்றும் அதில் இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற பேச்சுகள் வந்துவிட்டது. ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி மற்றும் ஒரு பேட்ஸ்மேனாகவும் அவர் அடுத்த 50 ஓவர் உலக கோப்பையில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது அனைவரும் அறிந்ததே..!!