உக்ரைன்- ரசியா போர் கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் மீது கடுமையான ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தி வரும் ரசியாவிற்கு எதிராக அமெரிக்கா உக்ரைனுக்கு ராணுவம் மற்றும் ஆயுதங்களை அளித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவிற்கு சென்ற உக்ரைன் அதிபர் ஜெலின்ஸ்கி அமெரிக்கா உக்ரைனுக்கு அளிப்பது தானம் அல்ல முதலீடு என்று பேசியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரசியா தாக்குதல் நடத்தியது. ரசியா இதை சாதாரண ராணுவ நடவடிக்கை என்று கூறிய நிலையில் அடுத்த இரண்டே நாட்களில் உக்ரைனின் தலைநகரமான கீவ் வரை முன்னேறி தாக்குதலை தீவிரபடுத்தியது. இதனை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அளித்து ரஸ்யாவிற்கு பதிலடி கொடுத்தது. அமெரிக்காவின் வருகையால் ரசியா ராணுவம் பின் வாங்கி தற்போது 4 மாகாணங்களில் போர் நடத்தி வருகிறது.
உக்ரைன் நாடும் ரஸ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வந்தாலும் தற்போது ரசியா ராணுவம் போரை தீவிரபடுத்தியுள்ளது. இதனால் உலக நாடுகளை ரசியா மீது கடும் கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், போர் தொடங்கியா பிறகு முதல்முறையாக வெளி நாடு சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜலன்ஸ்கி அமெரிக்காவின் வெள்ளிமாளிகைக்கு சென்றுள்ளது உலக அரசியலில் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. அப்போது பேசிய அவர் நீங்கள் கொடுக்கும் நிதியுதவி வெறும் தானம் என்று நினைக்காதீர்கள் இது ஒரு முதலீடு. பாதுகாப்புக்கான முதலீடு. இந்த அவையில் நான் உரையாற்றுவது பெருமைக்குரியது. எல்லா பிரச்சினைகளுக்கும் இடையே உக்ரைன் வீழவில்லை. உக்ரைன் இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகிறது. பதிலடி கொடுக்கிறது. அதிபர் பைடன் எங்களுக்கு துணை நிற்பதில் மகிழ்ச்சி. உக்ரைன் ஒருபோது ரஷ்யாவிடம் சரணடையாது.
என்று உக்ரைன் அதிபர் ஜெலின்ஸ்கி பேசியவுடன் அமெரிக்கா அதிபர் பைடேன் எழுந்து நின்று காய் தட்டினார். மேலும் இவரது பேச்சால் உக்ரைன் மற்றும் ரசியாவின் இடையிலிலான போர் தற்போது முடிவிற்கு வராது என்றே வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.