ஆஸ்திரேலியாவில் T20 உலக கோப்பை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது, சூப்பர் 12க்கு தகுதி பெற முதல் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. 2 முறை உலக சாம்பியன்ஸான மேற்கிந்திய அணி சூப்பர் 12ல் தகுதி வாய்ப்பை இழந்து முதல் தகுதி சுற்று போட்டிகளை விளையாடியது இன்று அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிர்பந்தத்தில் களம் இறங்கியது.
டாஸ் வென்ற மேற்கிந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது தொடக்கம் முதலே சொதப்பிய மேற்கிந்திய அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்தது இதில் ப்ரெண்டன் கிங் 48 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். இந்த இலக்கை பால் ஸ்டர்லிங் கின் 66 (48) மூலம் அயரலாந்து அணி 17.3 ஓவர்களில் எளிதாக எட்டி பிடித்தது. இந்த வெற்றி மூலம் அயர்லாந்து அணி சூப்பர் 12க்கு தகுதி பெற்றது.
முதன்முறையாக மேற்கிந்திய அணி உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறி அதிர்ச்சியளித்து. கேப்டன் பூரான் இந்த அத்தோல்விக்குறித்து கூறுகையில், நாங்கள் பாட்டிங்கில் சொதப்பிவிட்டோம்,தோல்விக்கான முழு போறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறினார்..