சென்னையில் அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னை அமைச்சர் அதிமுகாவினருடன் உரையாடினார் அப்போது, பழனிச்சாமி தலைமையில் தேர்தலில் வெற்றி பெற்றால் தமக்கு துணை முதல்வர் பதவிதான் தருவார்கள் என்று எண்ணி ஓபிஎஸ் சூழ்ச்சி செய்துள்ளார்,மேலும் அவர் சந்தர்ப்பவாதி என்றும் ஓபிஎஸ் மீது குற்றம் சாட்டினார்.
அதன் பிறகு செய்தியாளர்கள சந்தித்தஜெயக்குமார் கூறுகையில், பாலிசி முடிவுகளை முதல்வரை தவற வேறு யாராலும் எடுக்க முடியாது.ஆகயால் எங்கள் கட்சியில் இருக்கும் விஜயபாஸ்கரால் பாலிசி டெசிஷனை எடுக்க முடியாது, அப்போது அதிகாரம் முழுவதும் சசிகலா மற்றும் அவர்களின் உறவினர்களிடமே இருந்தது. சசிகலா எங்களை யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை நாங்களும் அங்கு செல்லவில்லை.
பத்து அறைகள் முழுவதும் அவர் மற்றும் அவரின் உறவினர்கள் தான் அப்பல்லோ மருத்துவமனையை ஆக்கிரமித்தார்களே தவிர வேறு யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை. ஆகையால் ஆறுமுகசாமி அறிக்கையினை வைத்து அரசு தான் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று அவர் கூறினார்.