சென்னைக்கு வந்த 13 கிலோ கடத்தல் தங்கம்..!! 113 பேர் சிக்கியது எப்படி..!!
ஓமன் நாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு 13 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.., ஓமனில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மதிப்பு 14 கோடி என தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை ஓமன் நாட்டில் இருந்து சென்னைக்கு அதிகளவு தங்கம் விமானம் மூலமாக கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் பயணிகள் அனைவரையும் சோதனைக்கு செய்துள்ளனர்.
நேற்று மதியம் வரை அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இருப்பினும் அதில் சிக்கியவர்கள் விசாரணைக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
பின் அதிகாரிகள் நடத்திய அதிரடி விசாரணையில் 14 கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் :
13 கிலோ தங்கம், 120 ஐபோன்கள், 84 ஆண்ட்ராய்டு போன்கள், மடிக்கணினிகள், வெளிநாட்டு சிகரெட்டு போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பதப்படுத்தப்பட்ட குங்கும பூவையும் ஓமனில் இருந்து கடத்தி வந்துள்ளனர்.
கடத்தலில் ஈடுபட்ட 113 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தி வரப்பட்டது பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..