உங்களுக்கும் இந்த முகப்பரு பிரச்சனை இருக்கா..? அப்போ நீங்களும் இதை ட்ரை பண்ணுங்க..!!
பரு வந்த தழும்பு போக்க உதவும் மஞ்சள் :
மஞ்சளில் ஆன்டி பாக்டீரியல், ஆன்டி வைரல், ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் இருக்கின்றன. இந்த மஞ்சளை சருமத்துக்கு பயன்படுத்தி வர,
சருமத்தில் ஏற்படும் பருக்கள் மற்றும் அதனால் ஏற்படும் தழும்புகளை மறையச் செய்யும்.
* பரு வந்த தழும்பு போக்க உதவும் தேங்காய் எண்ணெய் :
தேங்காய் எண்ணெய் சருமத்துக்கு இயற்கையான மாய்ஸ்ச்சரைஸராகச் செயல்படும்.
இது சருமத்தில் ஏற்படும் தொற்றுக்களைச் சரிசெய்வதோடு அதனால் ஏற்பட்ட தழும்புகளைப் போக்கவும் உதவி செய்யும்.
தேங்காய் எண்ணெயை பருக்கள் வந்த தழும்புகள் உள்ள இடத்தில் அப்ளை செய்து இரவு முழுக்க விட்டு விடுங்கள். பிறகு காலையில் முகத்தைக் கழுவிக் கொள்ளலாம்.
பரு வந்த தழும்பு போக்க உதவும் வெள்ளரிக்காய் :
வெள்ளரிக்காயில் நிறைய வைட்டமின்களும் மினரல்களும் இருக்கின்றன. சருமத்தை மென்மையாக்குவதோடு பிக்மண்டேஷன்களைக் குறைக்கச் செய்யும்.
வெள்ளரிக்காயை துருவி சாறெடுத்து அதை காட்டனில் நனைத்து பரு வந்த தழும்பு இடத்திலும் பிக்மண்டேஷன்களிலும் தினமும் வைத்து வர விரைவாக பரு வந்த தழும்புகள் வேகமாக மறையும்.
-நிரோஷா மணிகண்டன்
Discussion about this post