ஒரே வாரத்தில் நீங்களும் இலியானா ஆகலாம்…!!
உடல் எடையை குறைக்க விருப்பம் உள்ளவர்கள் என்ன உணவு சாப்பிடுவது என்று தெரியாமல் பலர் இருக்கிறார்கள். அதற்கு ஏற்ற உணவு தான் நான் உங்களுக்கு சொல்லப்போறேன்.
“முளைகட்டிய கோதுமை தோசை” ஒரு வாரம் சாப்பிட்டு பாருங்க அப்பறம் நீங்களே அசந்து போய்டுவிங்க.
உடல் எடை குறைக்க ஆர்வம் உள்ளவர்கள் இந்த தோசையை சாப்பிட்டு எடையை மிக சுலபமாக குறைத்து விடலாம்.
சிறிய குழந்தைகள் சரியாக என்ன கொடுத்தாலும் சாப்பிடுவது இல்லை என்று பெரும்பாலான அம்மாக்களுக்கு இது ஒரு கவலையாகவே இருக்கிறது, அவர்களுக்கு இந்த முளைகட்டிய கோதுமை தோசை செய்து பாருங்க குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
கோதுமையை முளைக்கட்டி சாப்பிட்டால் அதிக நன்மைகளை நம் உடலுக்கு தருவதுடன் , உடல் எடையும் எளிதில் குறையும்.
இந்த தோசை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…
தேவையான பொருட்கள
கோதுமை – கால் கிலோ
உளுந்து – 50 கிராம்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
செய்யும் முறை:
கோதுமை தோசை ஊற்ற , முன் நாள் இரவே கால் கிலோ கோதுமை எடுத்து தண்ணீரில் நன்கு அலசிய பின், நல்ல தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவேண்டும்.
மறுநாள் காலையில் கோதுமையை தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி எடுத்துகொண்டு , ஒரு சுத்தமான காட்டன் துணியில் கோதுமையை இருக்கமாக கட்டி , அதை அப்படியே எட்டு மணி நேரம் வைத்து விட வேண்டும்.
பிறகு எட்டு மணி நேரம் கழித்து அதை பார்த்தால், கோதுமை முளை வந்து இருக்கும். கோதுமை முளை கட்டிய அதை ஃபிர்ஜ்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.
இப்போது உளுந்து மற்றும் வெந்தயம் எடுத்துக்கொண்டு தண்ணீரில் சுத்தம் செய்து அதை மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.உளுந்து நன்றாக ஊறினால் தான் தோசை மாவு அதிகமாவும் மென்மையாகவும் இருக்கும்.
மூன்று மணி நேரம் கழித்து வெந்தயம், உளுந்தை எடுத்து மிக்ஸியில் போட்டு , அத்துடன் முளைகட்டிய கோதுமையும் சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்திற்கு நீர் விட்டு அரைத்து கொள்ள வேண்டும்.
பிறகு உப்பு சேர்த்து மாவினை கையால் கலந்தால் மாவு சீக்கிரம் புளிக்கும்.
குறைந்தபட்சமாக 5 மணி நேரத்திற்கு பிறகு வழக்கமாக தோசை ஊற்றுவது போல் ஊற்றி சாப்பிட்டால் அதிக குண்டாக இருப்பவர்கள் கூட மெலிந்து விடுவார்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..