டுடே ஸ்நாக் கோதுமை பணியாரம்..!
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு 125 கிராம்
முட்டை 1
காய்ச்சிய பால் 2 ஸ்பூன்
சர்க்கரை 4 ஸ்பூன்
சோடா மாவு கால் ஸ்பூன்
வெண்ணிலா எசென்ஸ் 1 ஸ்பூன்
ரவை 2 ஸ்பூன்
எண்ணெய் தேவையானது
தண்ணீர் தேவையானது
செய்முறை:
முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும்.
முட்டையில் கோதுமை மாவு, சோடா மாவு, பால், சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ் ஆகியவற்றை சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
உளுந்த வடை மாவு பதத்திற்கு கெட்டியாக சிறிது நீர் விட்டு கரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை மாவு தண்ணீராக விட்டால் ரவை சேர்த்து சரிசெய்து கொள்ளலாம்.
மாவினை 15 நிமிடங்களுக்கு அப்படியே வைக்க வேண்டும்.
பின் ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி மாவில் ஒரு ஸ்பூன் எடுத்து பந்தாக எண்ணெயில் போட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
அவ்வளவுதான் சூப்பரான கோதுமை பணியாரம் தயார்.