மால்புவா ஸ்வீட் ரெசிபி செய்யலாமா?
தேவையான பொருட்கள்:
ரவை – 1/2 கப்
கோதுமை மாவு – 1/2 கப்
மைதா – 1/4 கப்
சர்க்கரை – 1 கப்
எண்ணெய் (அ) நெய் தேவையான அளவு
ஏலக்காய் தூள் சிறிதளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 1 கப் சர்க்கரையை போட்டு அரை கப் நீர் ஊற்றி கொதித்ததும் ஏலக்காய்த்தூள் தூவி இறக்கி விட வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் ரவை, கோதுமை மாவு மற்றும் மைதா ஆகியவவை சேர்த்து தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் (அ) நெய் சேர்த்து சூடாக்கி அதில் நாம் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் சர்க்கரை பாகில் பொரித்து வைத்துள்ளவகளை போட்டு ஊற வைத்து பின் சாப்பிடலாம்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.