“மனமும் மனிதனும்” ஒரு முதியவரின் கதை..!
சென்றவாரம் ஞாயிற்று கிழமையன்று குடும்பத்துடன் ரயிலில் பயணம் மேற்கொண்டு இருந்தேன் அப்போது வண்டி ஒரு ரயில் நிலையத்தில் நின்றது. (நாம் எல்லாம் ஒதுங்கி நிற்கும் தோற்றத்தில்) ஒருவர் ஏறினார் . அவரது தோற்றம் பிச்சைக்காரர், பிளாட்பார்ம் வாசி, குடிகாரர் என்ற ரீதியில் இருந்தது.
டிக்கெட் பரிசோதகர் வந்தார். அவரிடம் டிக்கெட் கேட்டார். அங்கு இருந்த எல்லோர் கண்களும், அவரிடம் பயணசீட்டு இருக்காது என்ற ரீதியில் எண்ணி கொண்டு இருந்தனர். ஆனால் அவர் அழுக்கு லுங்கியைத் தூக்கி அன்டிராயர் பாக்கெட்டினுள் கையை விட்டு பயண சீட்டை எடுத்தார்..
அப்போதும் கூட நம்பிக்கை இல்ல நிலையில் டிக்கெட் பரிசோதகர் அவர் பாஸெஞ்சருக்கு டிக்கெட் எடுத்திருப்பார்.. என்ற எண்ணத்தில் இது எக்ஸ்பிரஸ்யா என்றார். அதுக்கோ அவர் இந்த வண்டிக்குத் தான் டிக்கெட் எடுத்திருக்கேன் ஐய்யா எனக் கூறி டிக்கெட்டைக் காண்பித்தார். அப்பொழுது அங்கு இவரை ஏளனமாக பார்த்த அனைவர் முகமும் அமாவாசை நிலவாய் பிரகாசித்தது.
க்ளைமாக்ஸே இனிமேல் தான்..
அவர் யாரையும் சட்டை பண்ணாமல் ஒரு ஓரமாக சென்று அமர்ந்து அவரின் கை பையை பிரித்தார். அப்பொழுதும் எல்லோருக்கும் அவர் பையில் இருந்து அனைவருக்கும் ஒவ்வாத வகையில் வெற்றிலை போடவோ அல்லது உணவினை எடுத்து அருவருப்பாய் உண்ணவோ போகிறார் என்ற எதிர்பார்ப்பு.
அவர் பையில் கையை விட்டு எடுத்தது ஒரு புத்தகத்தை. எடுத்தவர் புத்தகத்தினை பிரித்து அவர் முன்பு படித்து பாதியில் நிறுத்தியிருந்த அந்த பகுதியினை உறுதி செய்து கொண்டு யாரையும் பொருட்படுத்தமால் அவர் அந்த புத்தகத்தை படிக்கத் தொடங்கினார்.
அவர் படித்த புத்தகம் என்ன தெரியுமா..?
“மனமும் மனிதனும் “
அனைவர் முகமும் ” ஙே ” !!!
பயண நேரத்திலும், பயனாய் படிக்கும் அவர் எங்கே? தோற்றப் பிழை செய்து, அவரிடம் தோற்ற கனவான்கள் நாங்கள் எப்படி? என்று மனம் குறுகி அவரை பார்க்க மனம் மில்லை ….
நம்மை வென்றவரின் புகைப்படம்
நாம் தோற்றவரின் புகைபடம் பாருங்க…