இதெல்லாம் உங்களுக்கு ஒரு நாள் பயன்படும்..!
எண்ணெயில் கசடு தங்காமல் இருக்க அதில் பச்சை மிளகாயை போட்டு வைக்கலாம்.
உப்பு ஜாடியில் நீர் தங்குவதை தடுக்க அதில் புளியை சிறிது போட்டு வைக்கலாம்.
தக்காளியை உப்பு கலந்த நீரில் நனைத்து எடுத்து வைக்க நீண்ட நாட்களுக்கு சுவை மாறாமலும் கெடாமலும் இருக்கும்.
துவரம் பருப்பை மிக்ஸியில் சேர்த்து லேசாக அரைத்து வைத்தால் வேகவைக்கும்போது பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.
வெஜிடபிள் பிரியாணி செய்யும்போது இஞ்சி பூண்டு மிளகாய் மற்றும் புதினாவை அரைத்து செய்ய சுவையாக இருக்கும்.
எலுமிச்சை பழம் கெடாமல் இருக்க ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரத்திற்கு நீரில் போட்டு எடுத்து வைக்கலாம்.
மீதமான சப்பாத்தி மாவை பிரிஜ்ஜில் வைக்கும்போது அதன் மேலே எண்ணெய் தடவி காற்றுபோகாதபடி பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தி சுற்றி பின் பிரிஜ்ஜில் வைக்கலாம்.
மிளகாய் அரைக்கும்போது அதனுடன் கலுப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்க நன்றாக பொடியாகும்.
பருப்பு வேகவைக்கும்போது குக்கரில் மூடியில் பருப்பு ஒட்டிக்கொள்ளாமல் இருக்க அதில் சிறிது எண்ணெய் தடவி பின் வேகவைக்கலாம்.
பிரைட் ரைஸ் மற்றும் கிளறிய சாதம் செய்யும்போது சாதம் உடையாமல் இருக்க முள் கரண்டி பயன்படுத்தி கிளறி விட சாதம் உடையாது.
சின்ன வெங்காயத்தை நறுக்கிவைத்து எண்ணெயில் சேர்த்து வதக்கி பின் சாதத்தோடு சேர்த்து சாப்பிட வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும்.
ரசம் வைக்கும்போது கறிவேப்பிலை இல்லையென்றால் சிறிது முருங்கைக்கீரை தூவி இறக்கினால் நல்லா மணமாக இருக்கும்.