ரவுடி காக்கா தோப்பு பாலாஜிக்கு போட்ட ஸ்கெட்ச்..!! 6 கொலை 59 வழக்கு..!! பல பகீர் தகவல்கள்..!!
சென்னையில் ரவுடிகளின் அட்டுழியங்களை முற்றிலுமாக ஒழிப்பதற்காக கட்ட பஞ்சாயத்து, ஆள் கடத்தல், மாமூல் வசூல், கூலிப்படைக்கு ஆட்களை அனுப்புதல், திட்டமிட்ட படுகொலை சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகளின் ஆட்டம் ஒழிக்கப்பட்டு வருகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் “ஆம்ஸ்ட்ராங்” கடந்த மாதம் ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். அவரின் கொலையை தொடர்ந்து சென்னையின் அனைத்து ரவுடிகளின் அட்டூழியங்களையும் ஒழிக்க சென்னையின் போலீஸ் கமிஷ்னர் அருண் தலைமையிலான காவலர்கள் ரவுடிகளை நோட்டமிட்டு என்கவுண்டர் செய்து வருகின்றனர்..
முக்கிய குற்றவாளி சம்பவ செந்தில் :
தென் சென்னையின் பிரபல ரவுடிகளான சிடி மணி, சீசிங் ராஜா, சம்பவ செந்தில், மற்றும் காக்காதோப்பு பாலாஜி ஆகிய நான்கு பேரும் ஆந்திராவிற்கு தப்பி சென்றதாக சொல்லபடுகிறது.. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சம்பவ செந்தில் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது..
பல்வேறு வழக்குகளில் தேடபட்டு வரும் சம்பவ செந்தில், மற்றும் காக்காதோப்பு பாலாஜி சீசிங் ராஜா ஆகியோரை கைது செய்ய சென்னை கமிஷ்னர் தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக சொல்லபடுகிறது… அந்த சமயத்தில் சம்பவ செந்தில் பல கொலைகளை செய்ததாக சொல்லபடுகிறது இதனால் சம்பவ செந்தில் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர் ஆனால் சம்பவ செந்திலை அவர்களால் கொலை செய்ய முடியவில்லை..
கடந்த 2021ம் ஆண்டு வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும் படி அவர்களுக்கு சம்மன் வந்துள்ளது., அதற்காக சிடி மணி மற்றும் காக்கா தோப்பு பாலாஜி இருவரும் காரில் சென்று கொண்டிருக்கும் போது அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் அருகே அவர்கள் சென்ற காரின் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.. அப்போது அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் சொல்லபடுகிறது..
ஆனால் அதில் அவர்கள் தப்பி சென்று தலைமறைவாகி தனது கூட்டாளிகள் மூலம் பெரும்புதூர் மற்றும் திருவள்ளூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் உள்ள கழிவுகளை ஒப்பந்தம் எடுத்து பெரிய அளவில் தொழில் செய்து வந்தார். அதற்கு போட்டியாக இருந்த அரசியல் கட்சி பிரமுகர்களையும் வெட்டி கொலை செய்துள்ளனர்.
காக்கா தோப்பு பாலாஜிக்கு ஸ்கெட்ச் :
அதன்பின் குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகள்., ஏ பிளஸ் லிஸ்டில் வரும் ரவுடிகளை கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவின் பேரில் வடசென்னை ரவுடியான காக்கா தோப்பு பாலாஜி மீது 6 கொலை மற்றும் 17 கொலை முயற்சி உட்பட 59 வழக்குகள் நிலுவையில் இருந்தது குறிப்பிடதக்கது. கடந்த 3 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்த காக்கா தோப்பு பாலாஜி அரசியல் பிரமுகர் ஒருவரை கொலை செய்வதற்காக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.. கிடைத்த தகவலின் படி சென்னை முழுவதும் போலீசார் நேற்று முன்தினம் இரவு தொடர் வாகன தணிகையில் ஈடுபட்டு வந்துள்ளனர்..
அதன்படி கொடுங்கையூர் போலீசார் முல்லைநகர் மேம்பாலம் பகுதியில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு எம்.கே.பி.நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாதமுனி மற்றும் காவலர் சுகன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரி பதிவு எண் கொண்ட சொகுசு கார் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. இதை பார்த்த சோதனையில் ஈடுபட்ட போலீசார் காரை மறித்து சோதனை செய்தனர்.
அப்போது காரில் இருந்து 2 பேரில் ஒருவரை போலீஸ் விசாரணை நடத்தி கொண்டிருந்த போது மற்றொரு நபர் காருடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.., இதனால் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு உதவி ஆய்வாளர் நாதமுனி கொடுத்த தகவலின் படி வியாசர்பாடி பிஎஸ்என்எல் குடியிருப்பு அருகே அதிகாலை 4.50 மணி அளவில் அந்த காரை மடக்கி பிடித்தனர்…
கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த காக்க தோப்பு பாலாஜியை சரண்டர் ஆகும் படி போலீசார் எச்சரித்துள்ளனர்., ஆனால் அதை பொருட் படுத்தாத பாலாஜி தன்னுடைய துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி சுட்டுள்ளார்., ஆனால் காவலர்கள் சற்று விலகியதால் துப்பாக்கி குண்டுகள் போலீசாரின் ரோந்து வாகனத்தின் மீது பாய்ந்தது.
காவலர்களை சுட்டுவிட்டு தப்பி ஓட முயற்சித்த பாலாஜியை காவலர்கள் காலில் குறி வைத்து சுட்டுள்ளனர்., ஆனால் அந்த குண்டு அவரது வலது பக்கம் மார்பில் குண்டு பாய்ந்தது. இதில் நிலை தடுமாறி ரவுடி கீழே விழுந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை, உடனே போலீசார் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாலாஜி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீஸ் கமிஷனர் அருண் மற்றும் கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர் ஆகியோருக்கு தகவல் கொடுத்துள்ளார்.. சம்பவ இடத்திற்கு சென்று ரிப்போர்ட்களை சேகரித்து பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காரில் சிக்கிய முக்கிய பொருட்கள் :
மேலும் இரவு பாலாஜி ஓட்டி வந்த சொகுசு காரை காவலர்கள் பறிமுதல் செய்ததில் 10 கிலோ உயர் ரக கஞ்சா மற்றும் கள்ளத் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றியுள்ளனர்..
சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனர் பிரவேஷ் குமார் மற்றும் புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார், எம்கேபி.நகர் உதவி கமிஷனர் சச்சிதானந்தம் பாலாஜியுடன் யார் யாரெல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள்., வெளிமாநிலத்தில் இருந்து சென்னையில் யாருக்காக இந்த பொருட்கள் கொண்டு வரப்பட்டது..? இதில் யாரெல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுடப்பட்ட சம்பவம் பிற ரவுடிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் குறிப்பிட்டிருப்பதாவது போலீசார் 296(பி), 132, 109, 351(3), ஆயுத தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 10வது பெருநகர குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு வேண்டுகோள் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..