ஆடி மாதம் முனீஸ்வரர் வழிபாடு..!! சிறந்த பலன் கிடைக்க இந்த நாளில் வழிபடுங்கள்..!!
முனீஸ்வரர் என்பவர் யார் எந்த நாளில் வழிபட வேண்டும். அப்படி வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
முனீஸ்வரர் வரலாறு :
முனீஸ்வரர் என்பவர் பச்சை அம்மனின் காவல் தெய்வமாக இருந்தவர். இவரை “முனி” என்று தான் எல்லோரும் அன்போடு அழைப்பார்கள்.., முனி பச்சை அம்மனுக்கு மட்டுமின்றி முத்து மாரியம்மன், கருமாரியம்மன் என அனைவருக்கும் காவல் தெய்வமாக இருந்தவர்.
அனைத்து அம்மன் களுக்கும் இவர் காவல் தெய்வமாக இருந்ததால்.., ஒரு நாள் சிவ பெருமான் இவர் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என கேட்டுள்ளார்.
அதற்கு முனி.., எனக்கு இப்படியே அனைவருக்கும் காவல் காக்க வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு நம் சிவ பெருமான்.., இனி நீ அனைவருக்கும் காவல் தெய்வமாக இருப்பாய்.., இனி உன்னை காவல் தெய்வமாக விலங்குவாய் எனும் வரத்தை அளிக்கிறார்.
முனி என்ற பெயருடன் ஈஸ்வரனின் அருளும்.. சேர்ந்ததால் “முனீஸ்வரர்” என்று அழைக்கப்பட்டார். முனீஸ்வரரை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும். முனீஸ்வரரிலும் பல அவதாரங்கள் இருக்கின்றனர். பால் முனீஸ்வரர், ஜாதமுனி, காட்டு முனி.., உட்பட 5 முனிகள் இருக்கின்றனர்.
பால் முனீஸ்வரர்.. யாருக்கெல்லாம் குல தெய்வமாக இருக்கின்றரோ அவர்கள் மாதத்தில் ஒரு முறையாவது.., முக்கியமாக ஆடி செவ்வாய் அல்லது ஆடி வெள்ளி அன்று பால் பொங்கல் வைத்து.., படையல் இட வேண்டும். படையலில் அவருக்கு பிடித்த பொங்கல், பன், பொறி, சுருட்டு, மற்றும் மது வைத்து வழிபட்டால் சிறந்த பலன் கொடுக்கும்..,
வாரந்தோறும் செவ்வாய் கிழமை மற்றும் வெள்ளிகிழமை அன்று முனீஸ்வரர் கோவிலுக்கு சென்று.., வழிபடலாம். அந்த நாளில் சிவப்பு மற்றும் கருப்பு கயிறை கட்டி கொண்டால் கண் திஷ்ட்டி விலகி விடும்.., மற்றும் காத்து கருப்பு.., எதுவும் பின் தொடராது.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..