Friday, June 13, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

கேரளாவை உலுக்கிய நிலச்சரிவு..! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..! மாநில  சுகாதாரத்துறை  வெளியிட்டுள்ள அறிக்கை..?

 "மாநில சுகாதாரத்துறை மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறைகளை திறக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு தேவையான உதவிகளை "8086010833, 9656938689" ஆகிய எண்ணிற்கு அழைத்து உதவி கேட்கலாம்.

by logeshwari
July 30, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

கேரளாவை உலுக்கிய நிலச்சரிவு..! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..! மாநில  சுகாதாரத்துறை  வெளியிட்டுள்ள அறிக்கை..?

தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று வயநாடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழையால் “இன்று அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் மிக பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில்  கல்பட்டாவில்  மற்றொரு  நிலச்சரிவு  ஏற்பட்டுள்ளது.  அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த இரண்டு நிலச்சரிவில் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த இரண்டு இடங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியினை போலீசார், தீயணைப்பு துறையினர், வனத் துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழு ஆகியோர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த விபத்தில் தற்போது வரை 3 குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரித்து இருக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. மேலும் கோவை சூலூர் விமானப் படைத் தளத்தில் இருந்து விமானப் படையினர் இரண்டு ஹெலிகாப்டர்கள் மூலம் வயநாடு வரவழைக்கப்பட்டு தொடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

 

இந்த விபத்து குறித்து கேரளா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேரில் சென்று  பார்வையிட்டுள்ளார்.  பின்  செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்., “மாநில சுகாதாரத்துறை மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறைகளை திறக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு தேவையான உதவிகளை “8086010833, 9656938689” ஆகிய எண்ணிற்கு அழைத்து உதவி கேட்கலாம். வைத்திரி, கல்பட்டா, மேப்பாடி, மனந்தவாடி மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது. அனைத்து நிலை சுகாதாரப் பணியாளர்களும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மக்களை மீட்கும் பணி தீவிரமாக்கப்பட்டு இருப்பதால் உயிர் இழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் இல்லை.

ராகுல் காந்தி இரங்கல் :

இந்த கொடூர சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில், கருத்து பதிவிட்டுள்ளார்.. அதில் அவர் கூறியதாவது. “பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். சிக்கிக் கொண்டவர்கள் விரைவில் மீட்கப்பட வேண்டும். மீட்பு பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. இதில் அனைத்து ஏஜென்சிகளும் ஒன்றிணைந்து ஈடுபட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


பிரதமர் மோடி இரங்கல் :

அதேபோல் பிரதமர் மோடி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, “வயநாடு நிலச்சரிவு சம்பவம் மிகவும் வேதனையை அளித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர பிரார்த்தனை செய்கிறேன்.

முதலமைச்சர் பினராயி விஜயன் உடன் தொலைபேசியில் பேசினேன். தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

– லோகேஸ்வரி.வெ

Tags: #keralaWAYLAND LANDSLIDEகேரளா நிலச்சரிவுநிலச்சரிவுபிரதமர் மோடி இரங்கல்ராகுல் காந்தி இரங்கல்வயநாடு நிலச்சரிவு
ADVERTISEMENT

Related Posts

இந்தியா

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

இந்தியா

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

இந்தியா

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

Next Post
MADHIMUGAM NEWS

ஹவுராவில் தடம்புரண்ட சிஎஸ்எம்டி விரைவு ரயில்..! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..! விபத்திற்கான காரணம்..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

Trending News

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.