செல்வம் செழிக்க வியாழன்கிழமை குபேரன் வழிபாடு..!!
வியாழன் கிழமை என்றால்.., பலருக்கும் “சாய் பாபா” தான் நினைவிற்கு வருவார்.
ஆனால் செல்வம் அள்ளித்தரும் “குபேரனுக்கும்” உகுந்த நாள் என்பது.. நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
வீட்டில் எப்பொழுதும் செல்வம் செழிக்க என்ன செய்ய வேண்டும், எப்படி வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்..?
வாரந்தோறும் வியாழன் கிழமை அன்று, மாலை 5:00 மணியில் இருந்து 8:00 மணிக்குள், வாசலில் தண்ணீர் தெளித்து, பச்சரிசி மாவில் கோலம் இட்டு, அதன் மேல் செம்மண் பட்டையினால் அழகு படுத்த வேண்டும்.
பின் பூஜை அறையில் குபேர தீபம் ஏற்றி வழிபட்டால், வீட்டில் என்றும் செல்லம் நிலைத்து இருக்கும். மற்றும் எல்லாம் வளமும் கிடைக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ள.., தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி