பெண்களின் மாடர்ன் உலகம்..!!
பெண்களுக்கு புடவை மீதான காதலை குறைக்கவே முடியாது.., புடவை பாரம்பரிய உடை என்றாலும் மாடர்ன் உலகில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும்.
ஒவ்வொரு ஸ்டைலிஷ் உடைகள் பற்றியும் அதற்கு ஏற்ற மேட்சிங் ஆக்ஸ்சரிஸ் பற்றியும் பார்க்கலாம்..,
லாங்குர்தி : கொளுத்தும் வெயிலுக்கு சில காட்டன் உடைகள் ஏற்றதாக இருக்கும்.., வெளியே செல்லும் பொழுது சில பெண்கள் காட்டன் உடையை அணிந்து செல்ல தான் விரும்புவார்கள். வெயிலுக்கு ஏற்றவாறு இருக்கும். இதனால் காற்று கிடைப்பதோடு.., உடலில் உள்ள வெப்பத்தை வெளியேற்றி விடுகிறது. உடலில் உள்ள வெப்பம் வெளியேற்ற படுவதால்.., அம்மை போன்ற நோய்கள் வராமல் காக்கிறது.
ஜீன்ஸ் : பொதுவாகவே உயரம் குறைந்த பெண்களும்.., மெல்லிய உடல் எடை உடைய பெண்களும் ஜீன்ஸ் அணிவது வழக்கம், மெல்லிய உடல் எடை உள்ள பெண்கள் ஜீன்ஸ் மீது, டி-ஷர்ட், டாப் மற்றும் கோர்ட் எது அணிந்தாலும் அது அவர்களை அழகாக காட்டும்.
உடல் பருமன் அதிகம் உள்ள பெண்களும் அணியலாம்.., ஆனால் டி-ஷர்ட் அணிவதை விட ஷார்ட் டாப் அணியலாம்.
சுடிதார் : புடவை நிகர் சுடிதார் தான்.., புடவை கூட ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் தான் கட்டுகிறோம். ஆனால் சுடிதாரை டீனேஜ் பருவத்தில் இருந்தே உடுத்த ஆரம்பிக்கிறோம்.., கலாச்சார உடைகளில் சுடிதாரும் முக்கிய பங்கு வகிக்கிறது.
கல்யாண வீடு, கோவில், வேலை செய்யும் இடம் என பல இடங்களில் பெண்கள் சுடிதார் அணிந்து செல்கிறார்கள். சுடிதாருக்கு மேட்ச் ஆக ஜிமிக்கி கம்மல் அணிந்தால் இன்னும் அழகாக காட்டும்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி
Discussion about this post