அதிகம் சிந்திப்பது குழந்தைகள் மூளையை பாதிக்குமா..?
பொதுவாகவே 4 முதல் 15 வயதிற்கு வரை உட்பட்ட சிறுவர்களுக்கு சிந்தனை திறன் அதிகமாகவே இருக்கும். அவர்களின் கண்கள் எதை அதிகம் பார்கிறதோ அதை மூளைக்கு கொண்டு சென்று, எப்பொழுது அதை சிந்தனையிலே வைத்து கொண்டு இருக்கும்.
அதாவது 4 வயது குழந்தையிடம், நீ வருங்காலத்தில் நீ என்னவாக ஆக விரும்புகிறாய் என்று கேட்டால், நான் டாக்டர், கலெக்டர் ஆக விரும்புவேன் என்று அந்த குழந்தை சொல்லும். வளரும் பொழுது ஒரு சில குழந்தைகள் தான்.., சிறு வயது கனவை நினைவாக்க விரும்புவார்கள்.
ஒரு சில குழந்தைகள் வளரும் சூழல், சுற்றி நடக்கும் நிகழ்ச்சி போன்றவைகள் மூளைக்கு சென்று அவர்களை மாற்றி விடும். உதாரணமாக சாதாரணமாக படிக்கும் ஒரு குழந்தையை.., படி படி என்று சொல்லி ஃப்ரெசர் கொடுக்கும் பொழுது அதுவே, அவர்களுக்கு வெறுப்பை உண்டாக்கி விடும்.
மூளையில் ஃப்ரெசர் அதிகரிக்கும் பொழுது.., நியாபக மறதி ஏற்படக் கூடும். இதனால் குழந்தைகளின் எதிர்காலம் கட்டாயம் பாதிக்க கூடும். எனவே குழந்தைகளுக்கு அதிக ஃப்ரெசர் கொடுப்பதை தவிர்க்கலாம்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி
Discussion about this post