திருமணத்திற்காக மண்டபம் பார்க்க போன இடத்துல வருங்கால கணவருடன்..?
காதலித்து திருமணம் செய்துகொண்டாலும்.., பெற்றோர்களே பார்த்து திருமணம் செய்து வைத்தாலும்.., மண்டபம் முதல் பந்தியில் வைக்கும் உணவு வரை பெரியவர்களும்.., உறவினர்களும் பார்ப்பது தான் வழக்கம் ஆனா இங்க..!!
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த தீபா என்ற பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த பாலாஜி என்ற ஆணுக்கும் பெரியோர்கள் முன்னிலையில் ஏப்ரல் 6ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.. மேலும் நவம்பர் 6ம் தேதி திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர்..
கடந்த அக்டோபர் 2ம் தேதி திருமண மண்டபம் பார்க்க செல்லலாம் வா என பாலாஜி, தீபாவை அழைத்துக்கொண்டு வடபழனி சென்றதாக சொல்லப்படுகிறது..
இருவரும் வடபழனியில் நன்றாக சுற்றியுள்ளனர்.., தீபாவிடம் நான் உன் கணவன் ஆக போறவன் தானே.., என சொல்லி பல ஆசை வார்த்தைகளை களை பாலியல் உணர்வை தூண்டியுள்ளார்..
பின் இருவரும் நெருக்கமாகவும்.., தனிமையிலும் இருந்துள்ளனர்.., அதன் பின் பாலாஜி தீபாவிடம் இருந்து விலக ஆரமிதுள்ளார்.. இதுகுறித்து தீபா கேட்டதற்கு அவரிடம் சண்டை போடுவதை போல் போட்டுவிட்டு திருமணத்தை நிறுத்தியுள்ளார்..
மேலும் தீபா நேரில் சென்று விசாரித்தற்கு நீ திருமணத்திற்கு முன்னே கெட்டு போய் விட்டதால் உன்னை நான் திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன் என கூறியுள்ளார்..
இதுகுறித்து தீபா இன்று காலை ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.. புகாரின் பெயரில் பாலாஜியை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்..
Discussion about this post