போராட்டத்தில் இறங்கிய செவிலியர்கள்..!! கண்கலங்க வைக்கும் காட்சிகள்..!!
தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த செவிலியர்களை நிரந்தர நேர பணியாளர்களாக மாற்ற கோரி தேனாம்பேட்டையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்..
போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..
காரணம் குறித்து விசாரித்த போது.., ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, நிரந்தர பணி நியமானம்.., நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிடங்கள் உருவாகுவது உட்பட 11 கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுள்ளனர்..
எந்த வித முன்னறிவிப்பும் இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதால்.. காவல்துறையினர் செவிலியர்களை கைது செய்துள்ளனர்..
Discussion about this post