நீங்களும் ஹீரோயின் போல ஜொலிக்கனுமா..? அப்போ இந்த ரகசியம் கேளுங்க..!
உடம்பு பளப்பளனு இருக்கனுமா அப்போ சோப்பு போடுறத நிறுத்திட்டு இந்த பொடியை பயன்படுத்துங்க..
சருமம் ஈரப்பதமாகவும் சுத்தமாகவும் இருக்கும்படி பராமரிப்பது சருமத்திற்க்கு மிகவும் முக்கியமானவை.சில சமயங்களில் அதிகபடியான பராமரிப்பிற்க்கு நாம் ஸ்க்ரப்பை பயன்படுத்துகிறோம்.
சருமம் ஆரோக்கியமாக பாதுகாக்க நாம் அதிகம் செலவிட வேண்டாம். பாரம்பரியமாக நம் முன்னோர்கள் குளியல் பொடி மூலம் ஆரோக்கியமான சருமத்தை எப்படி பராமரிக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
குளியல் பொடி தயாரிக்க தேவையான பொருட்கள் :
- கடலை மாவு – 2 ஸ்பூன்
- சந்தனப்பொடி – 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
- குமப்பூ இதழ்கள் – 4 சிட்டிகை (அரை தேக்கரண்டி பாலில் ஊறவைத்து எடுக்கவும்)
- பன்னீர் – தேவைக்கு
- ஒரு சின்ன கிண்ணத்தில் கடலை மாவு, சந்தனப்பொடி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி கொள்ளவும்
- குங்குமப்பூ இதழை நன்கு பாலில் பிசைந்து அந்த கிண்ணத்தில் சேர்க்கவும்
- தேவையான அளவுக்கு பன்னீர் சேர்த்து அணைத்தையும் நன்றாக கலக்கினால் குளியல் பொடி தயார்.
* கடலை மாவு சருமத்தின் அடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்க செய்யும். இறந்த செல்கள் வெளியேற்ற உதவும். இது உடல் எக்ஸ்ஃபோலியண்ட் என்றும் சொல்லலாம். சருமத்தை பிரகாசமாக வைத்திருக்க உதவுகிறது.
* சந்தனம் சருமத்தை குளிரவைக்க செய்கிறது. சருமத்தில் பருக்கள் இல்லாமல் வைத்திருக்கிறது. உஷ்ணத்தால் வரும் சரும பிரச்சனைகளை குறைக்கிறது. உடலை நறுமணத்துடன் வைத்திருக்க செய்கிறது.
* மஞ்சள் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டவை.
* இதில் குங்குமப்பூ பால் சேர்ப்பதால் அது நிறத்தை மேம்படுத்தவும் செய்ய கூடியது. இது சருமத்துக்கு இயற்கையான பளபளப்பை அளிக்கிறது.
சருமத்துக்கு குளியல் பொடியை எப்படி பயன்படுத்துவது..?
* முதலில் சருமத்தை சிறிது ஈரம் படுத்திக்கொண்டு குளியல் பொடியை நன்கு கலந்து உடல் முழுவதும் தேய்த்து கொள்ளவும்.
* குளியல் பொடியை முகத்துக்கு மட்டும் கூட பயன்படுத்தலாம்.
* ஒரு 5 நிமிடம் கழித்து சிறிது ஈரப்பதத்துடன் இருக்கும்போதே வட்ட வடிவில் மசாஜ் செய்யவும்.மசாஜ் செய்யும்போது கண் பகுதியில் படாதவாரு பார்த்துகொள்ளவும்.
* மீண்டும் சிறிது ஈரப்படுத்தி வட்ட வடிவில் மசாஜ் செய்துக்கொண்டு ஒரு 15-20 நிமிடம் கழித்து முகத்தை சுத்தமான தண்ணீரால் நன்கு கழுவிய பின்பு மென்மையான காட்டன் துணி கொண்டு முகத்தை லேசாக ஒத்தி எடுக்கவும்.
குளியல் பொடியை பயன்படுத்துவதினால் கிடைக்கும் நன்மைகள் :
* குளியல் பொடி இறந்த சரும செல்களை வெளியேற்றும். இயற்கையான பொருள்களை கொண்டு செய்யப்படும் இது சருமத்துக்கு சிறந்த வழிகளில் நன்மை செய்யும்.
* வயதான அறிகுறிகள் தாமதப்படுத்தப்படும் – கொலாஜன் உற்பத்தியை தூண்டும் தன்மை இந்த இயற்கை பொருள்களுக்கு உண்டு. இந்த பொருள்கள் சருமத்தை இறுக்கி இளமையாக வைத்திருக்க செய்யும்.
* எக்ஸ்ஃபோலியண்ட் இது மென்மையான எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்படுகிறது. இறந்த சரும செல்களை வெளியேற்றி சருமத்தை புதியதாகவும் மென்மையாகவும் வைக்க உதவுகிறது.
* சரும பிரகாசம் – இயற்கையான பொருள்கள் ஆக்சிஜனேற்றங்கள் கொண்டவை. இது சருமத்தை வெண்மையாக்க செய்கின்றன.
* சரும சுத்திகரிப்பு – இது சருமத்தின் ஆழமாக ஊடுருவி, அழுக்கு, அதிகப்படியான எண்ணெய் போன்றவற்றை நீக்குகிறது. இது முகப்பரு மற்றும் தோல் பிரச்சனைகளை நீக்குகிறது.
* சருமத்தை ஈரப்பதமாக்குகிறது – பால் சருமத்துக்கு நீரேற்றம் அளிக்கிறது. மென்மையாக மிருதுவாக வைத்திருக்க செய்கிறது.
இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம் ஆண்கள் பயன்படுத்தும் போது மட்டும் மஞ்சள் தூள் தவிர்ப்பது நல்லது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..