முகப்பரு பிரச்சனைக்கு இதை ட்ரை பண்ணுங்க..
* முகப்பரு இருக்கவங்க முகத்தில் கை வைக்க கூடாது
* முகப்பருவை கைகலால் கில்ல கூடாது
* முகப்பருவின் மேல் சிறிது மஞ்சள் வைத்தால் பரு அழுந்த ஆரம்பிக்கும்,
* வேப்பிலையுடன் கசக்கி கூட மஞ்சள் வைக்கலாம்
* சோற்றுக்கற்றாழை சருமத்திற்க்கு மிகவும் நல்லது, கற்றாழையின் நடுபகுதியில் உள்ள சோற்றை எடுத்து நீரில் நன்கு அலசியப்பின் அதை கூழாக்கி முகத்தில் தடவிவர முகப்பரு மறையும்
* சந்தனத்துடன் பன்னீர் கலந்து முகத்தில் தடவி 15நிமிடம் கழித்து அலசி வந்தால் முகம் மிகவும் மென்மையாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும், முகப்பரு இன்றியும் காணப்படும்
* குப்பைமேனி பொடியும், அருகம்புல் பொடியும் எடுத்து அதில் பன்னீர் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்
* தலையணை உறையை அடிக்கடி மாற்ற வேண்டும்
* தலையில் பொடுகு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
* சூரிய ஒளி சருமத்திற்க்கு மிகவும் தேவை அவ்வபோது காலையில் 7 முதல் 8 மணி வரை சன் பாத் எடுப்பது நல்லது
* அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்..
* முகப்பரு வராமல் தடுக்க காய்கறிகள் கீரைகளை அதிகமாக உண்ண வேண்டும்
* சருமத்திற்க்கு தண்ணீர் மிகவும் அவசியம் தினசரி 3 லிட்டருக்கு குறையாமல் குடித்தால் முகப்பரு வருவதை தவிர்க்கலாம்..
* முகப்பரு ஏற்ப்பட முக்கிய காரணம் மலச்சிக்கல் எனவே உணவு பழக்க வழக்கத்தை சீராக வைத்து கொள்ள வேண்டும்
* தினசரி உடற்ப்பயிற்ச்சி செய்ய வேண்டும் அவ்வாறு செய்யும் போது சரும துவாரங்களில் உள்ள அழுக்குகள் நீங்கி,பருக்கள் வராமல் தடுக்கும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..