உங்கள் நெற்றி கருமையாக இருக்கா..? இதோ சூப்பர் டிப்ஸ்..!
நெற்றியில் வெயிலினால் உண்டாகும் கருமையை நீக்க வெண்ணெய் மற்றும் மோர் ஆகியவற்றை சம அளவில் எடுத்து கலந்து நெற்றியில் தடவி 20 நிமிடங்களுக்கு வைத்திருந்து கழுவி வரலாம்.
நெற்றி கருமை மறைய வாழைப்பழத்தை மசித்து அதில் தேன், தயிர் ஆகியவற்றை கலந்து நெற்றியில் பேக் போடலாம். இதனை நெற்றியில் 20 நிமிடங்களுக்கு வைத்திருந்து அலசலாம். இதனை வாரத்தில் 2 முதல் 3 முறை செய்து வர நெற்றியில் இருக்கும் சுருக்கங்கள், கருமை போன்ற பிரச்சனையை பூக்கும் அற்புதமான வைத்தியம் ஆகும்.
நெற்றி கருமையை போக்க அன்னாச்சிப்பழத்துடன் தேன் கலந்து நெற்றியில் பயன்படுத்தி குளிர்ந்த நீரில் அலசி வர கருமை இருந்த இடமே இல்லாமல் போய்விடும்.
நெற்றி கருமையை போக்க பப்பாளியானது ஒரு சிறந்த தீர்வு. பப்பாளியை மசித்து நெற்றியில் போட்டு காயவைத்து கழுவி வரலாம்.
இதற்கு மற்றொரு சிறந்த தீர்வாக அமைவது இளநீரும் சந்தனபவுடரும் ஆகும். இரண்டையும் சமஅளவில் எடுத்து நெற்றியில் தடவி காயவைத்து குளிர்ந்த நீரில் கழுவலாம். இதனை தொடர்ந்து வாரத்தில் 3 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
நெற்றியில் குங்குமம் வைத்த இடம் கருப்பாகவோ அல்லது தழுப்பாகவோ மாறினால், வில்வமரக் கட்டையை சந்தன கல்லில் உரைத்து தழும்பின் மீது தடவி வரலாம்.
