பனிக்காலம் வந்துடுச்சா..கண்டிப்பா இதை ட்ரை பண்ணுங்க..!
ஒரு கிண்ணத்தில் பாசிப்பயிறு மாவு, கடலை மாவு பயிறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அதில் சிறிது ஆரஞ்சு பழத்தோல் பொடியை சேர்த்து கலந்து அதில் சிறிது நீர் கலந்து பேஸ்ட் போல கலக்கி முகத்தில் பூசி காயவைத்து குளிர்ந்த நீரில் அலசிவர முக வறட்சி நீங்கி மிருதுவாக மாறும்.
ரோஜா இதழ்களை பால் சேர்த்து அரைத்து உதடுகளில் பூசி வர உதடு வெடிப்புகள் சரியாகும்.
பனிக்காலங்களில் சருமத்திற்கு சோப்பு பயன்படுத்துதல் கூடாது.
முகம் மிருதுவாகவும் பொலிவாகவும் மாற காய்ச்சாத பாலை பஞ்சில் நனைத்து முகம் முழுக்க தேய்த்து காயவிட்டு கழுவலாம்.
பனிக்காலங்களில் தலைமுடி அதிகமாக வறண்டுபோய் வெடித்து சேதமாகும், இதனை தவிர்க்க தலைக்கு அடிக்கடி எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும்.
பனிக்காலம் வந்தாலே சருமம் வெடித்து வறண்டு காணப்படும். இதனை தடுக்க குளிப்பதற்கு முன் தேங்காய் எண்ணெயை தேய்த்து பின் குளித்து வரலாம்.
முகத்திற்கு ஆவி பிடிப்பது முக்கியம். பனிக்காலங்களில் லேசாக சூடாக உள்ள நீரை கை, கால்களுக்கு மசாஜ் செய்து வரலாம்.
வெளியில் செல்வதற்கு முன் சருமத்தில் சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். இரவில் அடர்ந்த கிரீம் பயன்படுத்தும்போது சரும வறட்சியை தடுக்கலாம்.
வறண்ட சருமத்திற்கு தேனில் சிறிது முல்தானிமெட்டி பவுடரை கலந்து முகத்தில் தடவி வரலாம்.
வீட்டில் செலவில்லாமல் கிடைக்கக்கூடிய பாலாடை சிறந்த மாய்ஸ்ரைசர் ஆகும். பாலாடை எடுத்து கை, கால், முகத்தில் பூசி காயவைத்து அலசலாம்.
சாதம் வடித்த நீரில் சிறிது பால் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு வைத்திருந்து பின் முகத்தில் கழுவி வந்தால் தளர்ந்த சருமம் இறுக்கமாகும்.