மீண்டும் ரோவர் செயல்படுமா..? இஸ்ரோ விளக்கம்..!!
நிலவில் உறங்க வைக்கப்பட்டுள்ள சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பியது.
இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் வெற்றிகரமாக கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.
அதிலிருந்து பிரிந்து சென்ற ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணியில் ஈடுபட்டபோது, நிலவின் தென்பகுதியில் கந்தகம், அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீசு ஆகியவை இருப்பதை கண்டறிந்துள்ளது.
மேலும், நிலவின் மேற்பரப்புக்கு அருகே பிளாஸ்மா இருப்பதை விக்ரம் லேண்டர் உறுதி செய்தநிலையில், பிரக்யான் ரோவர் தனது பணிகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு சிலிப் மோடிக்கு (Sleep mode) சென்றது.
இதையடுத்து, விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் செப்டம்பர் 22ம் தேதி மீண்டும் செயல்பட துவங்கும் எனவும் இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், சந்திரயான்-3 லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் செயல்பட வைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
அக்டோபர் 6ம் தேதி வரை நிலவில் பகல் இருக்கும் என்பதால், தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வெற்றிகரமாக முடிந்த சந்திரயான்-3 திட்டத்தில் நிலவின் மேற்பரப்பில் பிரக்யான் ரோவர் வலம் வந்தபோது அதன் சக்கரத்தில் இருந்த இந்தியாவின் தேசியச் சின்னம் தெளிவாகப் பதிவு செய்யப்படவில்லை.
இது குறித்து விளக்கம் அளித்த இஸ்ரோ, ரோவர் சின்னங்களைப் பதிக்க முடியவில்லை என்பது ஒரு நல்ல அறிகுறி தான் என்றும் தென் துருவப் பகுதியில் நிலவு மண்ணின் பண்புகள் பற்றிய புரிதலுக்கு உதவுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..