எழுந்து வா விக்ரம்..!! என விக்ரம் லேண்டரை தட்டி எழுப்பும் இஸ்ரோ..!!
விக்ரம் லேண்டர் மீண்டும் செயல்படுமா..? என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும் என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி விண்ணுக்கு அனுப்பியது.
இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் வெற்றிகரமாக கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6.04 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.
அதிலிருந்து பிரிந்து சென்ற ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணியில் ஈடுபட்டது. நிலவின் தென்பகுதியில் கந்தகம், அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீசு ஆகியவை இருப்பதை கண்டறிந்துள்ளது.
மேலும் நிலவின் மேற்பரப்புக்கு அருகே பிளாஸ்மா இருப்பதை விக்ரம் லேண்டர் உறுதி செய்தது. பிரக்யான் ரோவர் தனது பணிகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு ஸ்லிப் மோட்-க்கு (Sleep mode) சென்றது.
பிரக்யான் ரோவரை தொடர்ந்து விக்ரம் லேண்டரும் உறங்க வைக்கப்பட்டது. விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் செப்டம்பர் 22ம் தேதி மீண்டும் செயல்பட துவங்கும் எனவும் இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், சந்திரயான்-3 லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் செயல்பட வைக்கும் பணி நடைபெற்று வருவதாக இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பிரக்யான் ரோவரை பொறுத்தவரையில் நான் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாகவும், லேண்டர் மூலமாக தான் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும் என் கூறினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..