இத்திருத்தலத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு புகழ்..!! பெண்கள் ஒருமுறை சென்றால் கிடைக்கும் வரம்..!!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த திருக்கடையூரில் மிகவும் பிரசித்தி பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடலுக்கு புகழ் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
பொதுவாக ஆன்மீக கதைகளின் படி பார்க்கும் போது ஒரு தெய்வம் உருவான கதையை சொல்லி இருப்பார்கள் ஆனால் இந்த திருத்தலத்திற்கு கோவில் எப்படி உருவானது என்ற பெயரே உண்டு..
அந்த காலத்தில் மார்க் கண்டேயனுக்கு பக்தராக இருந்து சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால்.
இந்த திருத்தலத்திற்கு “அட்டவீரட்டத் தலம் ” என்று அழைக்கப்பட்டது.., மேலும் இத்திருத்தலம் எமனை வதம் செய்த திருத்தலத்தில் ஒன்றாகவும் சிறந்து விளங்குகிறது.
இத்திருத்தலத்தில் அமைந்துள்ள கடேஸ்வரர் சுவாமியை தரிசனம் செய்ய சுற்று வட்டார கிராமத்தில் மட்டுமின்றி அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் கூட்டமாக வந்து இவரை தரிசனம் செய்து செல்வார்கள்.. சாதரண சமையத்தில் இக்கோவிலுக்கு வரும் கூட்டத்தை விட விஷேச சமயங்களில் வரும் கூட்டமே அதிகம்..
குறிப்பாக வருடம் தோறும் இங்கு சித்திரை திருவிழா 14 நாட்களுக்கு வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு படியாக இந்த ஆண்டும் சித்திரை திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து தினமும் அபிஷேகம்.., பூஜைகள் என செய்யப்பட்டு வந்தது.. இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய சிறப்பு வாய்ந்த அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
அதில் சுவாமி சமேத அமிர்த கடேஸ்வரர் மற்றும் அபிராமி அம்பாள் திருமணக் கோலத்தில் காட்சி அளித்தார் அதன் பின் எழுந்தருளி மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அப்பகுதி பெண்கள் தாய் வீட்டின் சீர் கொண்டு வந்து ஊஞ்சல் உற்சவம் நடத்தினார்கள்..
அதனை தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சியும்.., திருக்கல்யாணமும் சீரும் சிறப்புமாக மேளம் தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க பிரமாண்டமாக நடைபெற்றது.. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..
திருமணம் ஆகாத கன்னி பெண்கள் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தால் திருமணம் ஆகும் என்பதாலும், திருமணம் ஆன பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என்பதால் வழக்கத்தை விட இந்த முறை கூட்டம் அதிகரித்துள்ளது.., சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து இன்று மாலை சமேத அமிர்த கடேஸ்வர சுவாமி, மற்றும் அம்பிகை அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் புஷ்பப் பல்லக்கில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.. அப்போது திரளான மக்கள் தீப ஆராதனை செய்து வழிபட்டனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..