செவ்வாய் கிழமை வழிபாட்டின் சிறப்பு..!! இன்று ஒரு நாளில் நடக்க போகும் அதிசயம்..!!
தினமும் காலையில் சூரிய பகவானுக்கு நமஸ்காரம் செய்து விட்டு வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால்.., வீட்டில் லக்ஷ்மி கடக்ஷ்ம் இருக்கும் என்பது ஐதீகம்.., அதேபோல் சில நாட்களிலில் சில தெய்வங்களை வழிபாடு செய்தால் நினைத்தவை நடக்கும் என்பது ஐதீகம்..
அதேபோல் இன்றைய இறைவன் வழிபாட்டில் நாம் பார்க்க இருக்கும் ஆன்மீக தகவலை பற்றி விரிவாக பார்க்கலாம்.
செவ்வாய் கிழமையான இன்று கருமாரியம்மனை வணங்கி முக்தியைப் பெற அம்மன் கவச பாடல்களை ஒலிக்க செய்யுங்கள். அன்னையின் தாள் பணிந்து அடைக்கலம் புகுந்தால் குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் நீடித்து நிலைக்கும் என்பது ஐதீகம்.
எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் சரி, ஒவ்வொரு வெள்ளியுமே அம்மன் வழிபாடுக்கு சிறந்தது அதே போல தான் இந்த செவ்வாய் கிழமையும் இன்றைய தினம் நீங்கள் விரதம் இருந்து ( அசைவம் சாப்பிடாமல் ) அம்பிகையை வழிபட்டால் நீங்கள் நினைத்த நற்செய்தி உங்களை தேடி வரும்.
துள்ளித் திரியும் சிங்கத்தில் பவனி வரும் அம்பிகை அம்மனை இன்றைய நாளில் வழிபட்டால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும் என்பதும் நம்பிக்கை.
அதேபோல் மாலை நேரத்தில் அம்பிகை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி, அல்லது புவனேஸ்வரி அம்மனை அலங்கரித்து தீப ஆராதனை செய்து வழிபாடு செய்தால் வளங்கள் பெருகும் என்றும் மன நிம்மதி நிறைந்திருக்கும்.
இவ்வாறு செய்தால் என்ன பலன் என்று நீங்கள் நினைக்கலாம்..,
* திருமணம் ஆகாத கன்னி பெண்கள் இந்த வழிபாட்டை செய்தால் திருமண தடை நீங்கும்..,
* திருமணம் ஆன பெண்கள் வழிபட்டால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்..,
* குழந்தை இல்லாத பெண்கள் மனதார வணங்கினால் குழந்தை வரம் கிடைக்கும்..
குறிப்பாக குடும்ப முன்னேற்றமும், மாங்கல்ய பாக்கியமும், கணவருக்குத் தொழில் மேன்மையும் ஏற்படும். முடிந்தவரை விளக்கு பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத்துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நற்பலன்கள் வந்து சேரும். இல்லத்தில் மங்கலம் உண்டாகும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..