இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. கடந்த சில ஆண்டுகளாக இவர் நடிப்பில் பெரிதும் படங்கள் எதுவும் வரவில்லை என்றாலும் கூட, ரசிகர்களால் உச்ச நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார். சமீபத்தில் சமந்தா தனது கணவர் நாகசைதன்யாவை பிரிந்தார். இவருக்கு ஒரு வித தசைநார் நோயும் உள்ளது. இந்த நிலையில், சக்சஸ்வெர்ஸ் என்கிற இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டது.
ஆண்கள் நோய்வாய்ப்பட்ட தன் மனைவியை விட்டு செல்வது ஏன்? உறவுகள் கைவிடுவதற்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன? போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டிருந்தது. ஆண்கள் தங்களது நோய்வாய்ப்பட்ட மனைவியை விட்டு பிரிந்து சென்றுவிடுகிறார்கள். ஆனால், பெண்கள் பெரும்பாலும் தங்கள் நோய்வாய்ப்பட்ட கணவனை நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள்” என்கிற புள்ளி விவரத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ இன்ஸ்டா பக்கத்தில் 60 ஆயிரம் லைக்குகளை பெற்று வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை நடிகை சமந்தாவும் லைக் செய்திருக்கிறார். ஆனால், அவர் எந்தவிதமான கருத்தும் வெளியிடவில்லை.