இந்திய ருபாய் நோட்டுகளில் காந்தி படத்தின் அருகில் விநாயகர் மற்றும் லட்சமி போன்ற கடவுள்களின் படங்களும் இருக்க வேண்டும் இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மீ கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறிருந்தார். இந்த கருத்துக்கு பல தரப்பினரும் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற எம்.பி மணீஷ் திவாரி அதற்கு பதில் அளித்துள்ளார்.அவர் கூறுகையில், ஒரு பக்கத்தில் காந்தி படமும் மறுபக்கத்தில் டாக்டர் அம்பேத்கர் படமும் அச்சிட பட வேண்டும் என்று கூறியுள்ளார், மேலும் சமத்துவம் பற்றி பேசிய நவீன இந்தியாவின் ஆளுமையான அம்பேத்கார் படத்தை ஏன் ரூபாய் நோட்டுகளில் அச்சிடக்கூடாது என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்துக்கு பல அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர் மேலும் ஆம் ஆத்மீ கட்சி நிர்வாகிகள் இந்து மதத்திற்கு எதிரான பரப்புரையையே நடத்திவருவதாகவும் மேலும் குஜராத் மாநிலத்தின் தேர்தலை முன்வைத்தே அரவிந் கெஜர்வால் இந்த யுத்தியை பயன்படுத்துகிறார் என்றும் கூறிவருகின்றனர்.