கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் இணைந்து உருவாக்கிய படம் விக்ரம். இந்த படம் 2022ம் ஆண்டின் மிக பெரிய வெற்றி படமானது. கடந்த காலங்களில் கமல்ஹாசனுக்கு அவருக்கு சரியான படங்கள் அமையாததால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில்தான் கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் அவருடன் இணைந்து விக்ரம் என்ற ஆக்சன் படத்தை கொடுத்து ரசிகர்களுக்கு விருந்தளித்தார்.
விக்ரம் படம் 400 கோடிக்கு மேல் வசூலித்து தமிழ் சினிமாவின் அணைத்து சாதனைகளையும் தன் வசம் ஆக்கியது .இதை தொடர்ந்து மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் விஜயுடம் இருக்கும் என்ற தகவல் வெளியாகி வரும் நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில்தான் கமல் மற்றும் லோகேஷ் இருவரும் தீபாவளியை சேர்ந்து கொண்டாடியுள்ளனர். இதுகுறித்து இயக்குனர் ரத்னகுமார் புகைப்படத்துடன் கூடிய ட்வீட் செய்துள்ளார் அதில் “தீபாவளி எப்படி போச்சுடான்னு கேட்டால், இந்த போட்டோ காமிச்சான். என்றென்றும் ஊக்கமளிக்கும் பயணம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரத்னகுமார் மேயாதமான்,ஆடை போன்ற படங்களை இயக்கியுள்ளார்.மேலும், விக்ரம் படத்தில் வசனம் எழுதியும் அடுத்த லோகேஷின் படத்திலும் வசனம் எழுத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.