மணமணக்கும் நெத்தலி மீன் குழம்பு..!
தேவையான பொருட்கள்:
தேங்காய் மசாலா விழுது தயாரிக்க
தேங்காய் – 1/2 கப் (துருவிய)
சீரகம் – 1/2 தேக்கரண்டி
தண்ணீர்
குழம்பு
நெத்திலி மீன்
தேங்காய் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
சிறிய வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கிய )
பச்சை மிளகாய் – 2 (நறுக்கிய)
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
தக்காளி – 1 (பொடியாக நறுக்கிய)
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
புளிக்கரைசல் – 1/2 கப்
கறிவேப்பிலை
தண்ணீர் தேவையான அளவு
உப்பு
செய்முறை:
ஒரு மிக்ஸியில் துருவிய தேங்காய்,சீரகம் மற்றும் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீரை சூடு செய்து அதில் நெத்தலி மீனை போட்டு சிறிது நேரத்திற்கு அப்படியே வைத்து பின் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,வெந்தயம்,பூண்டு, சின்ன வெங்காயம்,பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதில் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி வதங்கியதும் உப்பு,மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்ததாக இதில் புளிக்கரைசல், அரைத்த தேங்காய் விழுது சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
குழம்பு கொதித்து வந்ததும் அதில் நெத்தலி மீனை சேர்த்து மூடி சிறிது கொதிக்க வைத்து இறக்கவும்.
அவ்வளவுதான் மணமான நெத்தலி மீன் குழம்பு தயார்.