பெண்களே இது உங்களுக்கு தான்..!
கறிவேப்பிலை ஒரு மாதத்திற்கு கெடாமல் இருக்க, அதனை நீரில் அலசி உலர வைத்து பின் ஃபிரிஜ்ஜில் வைக்கலாம்.
பூண்டில் சிறிது கேழ்வரகு சேர்த்து வைக்க பூண்டு நீண்ட நாள் புழுக்காமல் இருக்கும்.
குருமா செய்யும்போது வெங்காயத்தை பச்சையாக அரைத்து சேர்த்தால் குருமா நல்லா வாசனையாக இருக்கும்.
சாம்பாருக்கு பருப்பு வேகவைக்கும்போது அதில் சிறிது வெந்தயம் சேர்த்து வேகவைத்து சாம்பார் வைக்க சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.
பாலை திரிய வைத்து பன்னீர் செய்யும்போது எலுமிச்சை சாறுக்கு பதில் தயிர் சேர்த்து திரிய வைத்து செய்தால் பன்னீர் புளிக்காமல் இருக்கும்.
வெந்தயக்கீரை சப்பாத்தி செய்யும்போது அதில் சிறிது தயிர், கடலை மாவு சேர்த்து சப்பாத்தி செய்தால் சுவையாக இருக்கும்.
சாதம் வடிக்கும்போது குழைந்து போய்விட்டது போல் தெரிந்தால் அதில் சிறிது நல்லெண்ணெய் சேர்க்க மேலும் சாதம் குழையாது.
பிளாஸ்டிக் டப்பாவில் அடிக்கும் துர்நாற்றத்திற்கு சிறிது வினிகர் சேர்த்து கழுவ வேண்டும்.
பிரட் துண்டுகளை நீரில் நனைத்து பின் கோதுமை மாவில் சேர்த்து பூரி செய்தால் பூரி ரொம்ப மொறுமொறுவென இருக்கும்.