செமிகண்டக்டர் உற்பத்தி.. பிரபல நிறுவனத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி..
இந்தியாவின் பிரதமராக 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்ப்பதற்கான பல்வேறு முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகிறார். அந்தவகையில் 2 நாட்கள் அரசு முறை பயனமாக சென்ற அவர் நேற்று இரவு சிங்கப்பூர் சென்றார். 5வது முறையாக சிங்கப்பூருக்கு சென்ற மோடிக்கு அந்நாட்டு அரசு சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் செமகண்டக்டர் உற்பத்தியில் சிறப்பான நிறுவனமாக இருக்கும் ஏ.இ.எம்-ஐ, இன்று பிரதமர் மோடியும், அந்நாட்டு பிரதமரும் பார்வையிட்டனர். அப்போது, அந்த செமிகண்டக்டர் உற்பத்தியில் ஏ.இ.எம்-ன் பங்கு, அதன் செயல்பாடுகள், இந்தியாவுக்கான திட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள், பிரதமர் மோடிக்கு விளக்கப்பட்டது.
2024 செப்டம்பர் 11-13 தேதிகளில் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறவுள்ள செமிகான் இந்தியா கண்காட்சியில் பங்கேற்குமாறு சிங்கப்பூர் செமிகண்டக்டர் நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
இரு நாட்டுப் பிரதமர்களின் இந்தப் பயணம், இந்தத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இரு தரப்பினரும் கொண்டுள்ள உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது. இந்தப் பயணத்தில் தம்முடன் இணைந்ததற்காக, பிரதமர் வோங்கிற்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.