இது தெரிந்தால் நீங்கள் தான் சமையல் ராணி..!
பருப்பு டப்பாவில் வண்டு பிடிக்காமல் இருக்க பூண்டின் நடுப்பகுதியை எடுத்து பருப்பு டப்பாவில் போட்டு வைக்கலாம்.
காரம் சேர்த்து சமைக்கும் பலகாரங்களுக்கு மிளகாய்ப்பொடி சேர்க்காமல் பச்சை மிளகாய் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி அந்த தண்ணீரை சேர்த்து பலகாரம் செய்தால் சுவையாகவும் கலராகவும் இருக்கும்.
உளுந்து அப்பளத்தை சுட்டு தூளாக்கி அதை தயிர் பச்சடியில் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
கார குழம்பு செய்யும்போது அதில் வறுத்த கடலை பருப்பு பொடி சேர்த்தால் குழம்பு சுவையாக இருக்கும்.
கோவைக்காய் பழுத்துவிட்டால் அதனை வட்டமாக அரிந்து பின் உப்பு கலந்த தயிரில் ஊறவைத்து காயவைத்து, வத்த குழம்பில் சேர்த்து சமைத்தால் சுவையாக இருக்கும்.
வெங்காய சாம்பார் செய்யும்போது வெங்காயத்துடன் தேங்காய் சேர்த்து வதக்கி அரைத்து குழம்பில் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
ஆரஞ்சு தோலை கீழே போடாமல் பொடியாக நறுக்கி அத்துடன் பச்சை மிளகாயும் நறுக்கி அதில் வத்தகுழம்பு செய்தால் சுவையாக இருக்கும்.
நறுக்கிய கத்தரிக்காய் காம்புகளை வீணாக்காமல் அதனை ரசம் அல்லது சாம்பாரில் சேர்த்தால் சுவையாக இருக்கும்.