தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவரின் வீட்டில் திருடர்கள் புகுந்து கொள்ளை…
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் அஞ்சல்துறை பெண் அதிகாரியின் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
அரக்கோணம் அடுத்த வடமாம்பாக்கம் பார்வையற்றோர் இல்லத்தின் அருகில் உள்ள கம்பன் தெருவை சேர்ந்தவர் முருகேஸ்வரி. இவர் அரக்கோணம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 7 ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக சென்றார்.
காலை வீடு திரும்பிய போது அவரது வீட்டின் முன்பக்க கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 10 சவரன் நகை திருடு போனது தெரிய வந்தது.
இது குறித்து காவல் நிலையத்தில் முருகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.