TN Schools Reopening Day
தமிழகத்தில் பள்ளிகளுக்கு தற்போது கோடை விடுமுறை இருக்கும் நிலையில் பள்ளிகள் மீண்டும் திறப்பது தள்ளிப்போகுமா அல்லது திட்டமிட்டப்படி ஜூன் 2ஆம் தேதி திறக்ப்படுமா என்பது தான் தற்போது பலரது கேள்வியாக இருக்கிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் மார்ச் மாதம் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை +2 வகுப்பிற்கான தேர்வுகள் நடைபெற்றன. அதேபோல், மார்ச் 5ம் தேதி முதல் 27ம் தேதி வரை +1 வகுப்பு தேர்வுகளும், மார்ச் 28ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை 10ம் வகுப்பு தேர்வுகளும் நடைபெற்றன. TN Schools Reopening Day
பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை 8,21,057 மாணவர்கள் எழுத அனுமதிக்கப்பட்டனர். பதினோராம் வகுப்பு தேர்வை மொத்தம் 8,23,261 மாணவர்களும், பதாம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 9,13,036 மாணவர்களும் எழுதினர். மார்ச் 26-ம் தேதி முதல் கோடை விடுமுறை என அறிவிக்கப்படது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே-8ம் தேதி வெளியான நிலையில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் விரைவில் வெளியாக உள்ளது.
இதனிடையே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் ஜூன் மாதம் வரை அதிகம் இருக்கும் என சென்னை வானிலை மையம் கணித்திருந்தது. இதனால் பள்ளிகள் திறப்பது தள்ளிப்போகலாம் என தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது கத்தரி வெயில் தொடங்கிய போதும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே உள்ளது.
வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தாலும் வரும் நாட்களில் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆனாலும் ஜூன் மாதத்தில் இந்த வெயில் தொடராதபட்சத்தில் அறிவிக்கப்பட்டபடியே ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறும்போது, “வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்படும்” என்றார். மேலும் வெப்பத்தை பொறுத்து அந்த நேரத்தில் முதலமைச்சர் ஆலோசனைப்படி பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. TN Schools Reopening Day