கர்நாடக அரசு சுற்றுலா பேருந்து கான்கிரீட் தடுப்பு சுவரில் மோதி விபத்து…
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கர்நாடக அரசு சுற்றுலா பேருந்து கான்கிரீட் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கர்நாடக அரசு சுற்றுலா பேருந்து வந்து கொண்டிருந்தது.
அப்போது ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடி அருகே வேகமாக வந்த பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடுவே அமைக்கப்பட்டு இருந்த கான்கிரீட் தடுப்புச் சுவரில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் சிறிய காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் விபத்துக்குள்ளான பேருந்தை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
பின்னர் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.