சுவையான டேஸ்டில் முட்டை இட்லி ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
முட்டை – 7
காய்ச்சாத பால் – 4 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
கேரட் – 2 (துருவியது)
மிளகு – 1 ஸ்பூன்
நெய் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – சுவைக்கு ஏற்ப
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் முட்டையில் காய்ச்சாத பால், மஞ்சள்தூள், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட் மற்றும் குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
அனைத்தும் நன்றாக வதங்கியதும் அதில் கொஞ்சமாக மிளகுத்தூள் சேர்த்து கலந்து விடவும்.
பின் அதில் கலந்து வைத்துள்ள முட்டை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இந்த கலவையை ஊற்றி இட்லி ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
அவ்வளவுதான் சுவையான டேஸ்டில் முட்டை இட்லி தயார்.
