50 வயது முதியவரிடம் நான் கற்றுக்கொண்டது..! வாழ்க்கையே ஒரு..!
கடந்த சில தினங்களாக நம் மதிமுகம்-ல் நிஜக்கதைகள் பார்த்து வருகிறோம் அப்படி தான் இதுவும் நேற்று 50 வயதைக் கடந்து 60 நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ஒருவரிடம் அவரின் வாழ்க்கை அனுபவங்கள் பற்றி கேட்டோம் அப்போது அவர் சொன்ன சில பதில்கள் எனக்கு உபயோகமாக இருந்தது அதை பற்றி படிக்கலாம் வாங்க…
1) நான் பிறந்த பின் என் பெற்றோரை நேசித்தேன், அதன் பின் என் உடன் பிறந்தவர்கள், ஒரு 25 வயதுக்கு மேல் என் மனைவி., என் குழந்தை, என் நண்பர்கள்.. இப்படியே பலரையும் நேசித்த என வாழ்க்கையில் இப்போது தான் என்னை நேசிக்கத் துவங்கி உள்ளேன்.
2) காரணம் நான் “உலக வரைபடம்” அல்ல என்று உணர்ந்து கொண்டேன். இந்த உலகத்தை என் தோள்களில் சுமப்பதில்லை. உலகில் வாழ உழைத்து கொண்டு இருக்கிறேன்..
3) காய்கறி விற்கும் தங்கச்சியிடம், பழம் விற்கும் தம்பியிடம் பேரம் பேசுவதை நிறுத்தி விட்டேன். பத்து ரூபாய் அதிகமாகக் கொடுத்து விட்டேனே என்று மண்டையை உடைத்துக் கொள்வதில்லை. அவர்கள் மகள்களின் படிப்புச் செலவுக்கு இது உதவும் என்ற சந்தோஷத்தில் அதை செய்கிறேன்..
4) உணவகங்களில் கூடுதலாக டிப்ஸ் தருகிறேன். அன்றாட வாழ்க்கையை நடத்த, என்னை விட அதிகமாகப் போராடும் சர்வர் முகம் மலரலாம்.
5) எத்தனை தடவை இந்தக் கதையைச் சொல்லுவீங்க என்று இப்போதெல்லாம் முதியவர்களிடம் சொல்வதில்லை. அவர்கள் இந்தக் கதைகளால், நமது பழைய நினைவுகளை கடந்த காலத்திலிருந்து விடுபடுகிறேன்.
6) சில நேரங்களில் பிறர் சொல்வது தவறு என்று தெரிந்தாலும், எல்லோரையும் திருத்தும் பொறுப்பு என்னுடைய பொறுப்பல்ல. எல்லோரும் சரியாக இருக்க வேண்டும் என்பதை விட என் மன அமைதி எனக்கு முக்கியம். என கடந்து செல்கிறேன்
7) பெருந்தன்மையுடன், தாராளமாகப் பாராட்டுகிறேன். இது, பாராட்டுப் பெறுபவருக்கு மட்டுமல்ல, என்னுடைய மனதுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. சின்ன ஆலோசனை – ஒருவர் உங்களைப் பாராட்டும்போது, ஒருபோதும் மறுக்காதீர்கள், நன்றி சொல்லி முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள்..
8) என்னுடைய ஆடையில் எண்ணெய்க் கறை பட்டு விட்டால் அலட்டிக் கொள்வதில்லை. தோற்றத்தை விட ஆளுமைதான் உரக்கப் பேசுகிறது.
9) என்னுடைய மதிப்பை உணராதவர்களிடம் இருந்து விலகிப் நிற்கிறேன். அவர்கள் என் மதிப்பை அறியாமல் இருக்கலாம், என நான் அறிகிறேன்.
10) யாராவது பந்தயத்தில் என்னை முந்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, மோசமாகச் செயல் பட்டாலும் நான் நிதானமாகவே இருக்கிறேன். நான் பந்தயத்தில் இல்லை. என் வாழ்க்கையை வாழ்கிறேன்.
11) என் உணர்வுகளை எண்ணி சங்கடப்படாமல் இருக்கக் கற்றுக் கொள்கிறேன். என்னை மனுசனாக்குபவை என் உணர்வுகள் மட்டும்தான்.
12) ஒரு உறவை முறித்துக் கொள்வதை விட, ஈகோ-வை விட்டு விடுவது நல்லது என்று அறிந்து கொண்டுள்ளேன். என் ஈகோ என்னைத் தனிமைப்படுத்தும்; உறவுகளால் நான் தனிமைப்பட்டுப் போக மாட்டேன்.
13) ஒவ்வொரு நாளையும், இறுதி நாளைப் போல வாழக் கற்றுக் கொண்டுள்ளேன். இது கடைசி நாளாகவும் இருக்கலாம்.
14) என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பவற்றைச் செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய சந்தோசத்திற்கு நான்தான் பொறுப்பு. மகிழ்ச்சி என்பது ஒரு தேர்வு. அதைத் தேர்ந்தெடுத்து எந்த நேரத்திலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
இதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன வென்றால் பெற்றோர் முதல் பேர பிள்ளைகள் வரை நம் கடைசி காலம் வரை அனைவரையும் நேசிக்கிறோம்.. சிலவற்றை கடந்து செல்கிறோம்.. அதில் கிடைக்கும் அனுபவங்கள் நிறைய சிலர் நமக்கு புகட்டும் பாடத்தை அதாவது ஒரு சிலர் கொடுக்கும் நம்பிக்கை துரோகத்தை நினைத்து சோர்வடையாமல் இதுவும் கடந்து போகும் என கடந்து செல்ல வேண்டும்…
இதையும் படிங்க..
– லோகேஸ்வரி.வெ