சென்னையை மாண்டஸ் புயல் நெருங்கி கொண்டிருக்கும் நேரத்தில் நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் பாஜக கட்சியின் கொடிகளை ரோடு முழுவதும் வைத்துள்ளதை ஒருவர் புகைப்படம் எடுத்து அண்ணாமலை விமர்சித்து ட்வீட் போட்டுள்ளார் அதற்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
அண்ணா!
உங்களுடைய கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன். இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரிடம் இது குறித்து அறிவுறுத்தியுள்ளோம். அடுத்த முறை நடக்காதவாறு பார்த்துக் கொள்கிறோம்.
நன்றி! https://t.co/8gNmVM92aq
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) December 9, 2022
அவரின் த்விட்டேர் பக்கத்தில், புயல் வரும் நாள் அன்று இப்படி பிஜேபி கொடியை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் வைத்துள்ள உங்கள் கட்சிக்கு ஏதாவது அறிவு இருக்கிறதா அண்ணாமலை அவர்களே? கொடி காற்றில் விழுந்து 4 பேர் செத்தா உங்களுக்கு என்ன ? சென்னை காவல்துறையும் மற்றும் தமிழ்நாடு காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கோபமாக பதிவிட்டுள்ளார்.
அதற்க்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, அண்ணா! உங்களுடைய கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன். இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரிடம் இது குறித்து அறிவுறுத்தியுள்ளோம். அடுத்த முறை நடக்காதவாறு பார்த்துக் கொள்கிறோம். என்று அந்த நபருக்கு பதிலளித்துள்ளார். புயல் நாளன்று இந்த வாறு கொடிகளால் விபத்து ஏற்படும் என்பதை கூட பாஜக அறியாத என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.