வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டின் முதல் புயலான மாண்டஸ் புயல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மாமல்லபுரம் கடற்கரையில் கரையை கடந்தது. இதனால் பல பொருட்சேதங்களும் உயிர்சேதங்களும் ஏற்பட்டது. இந்நிலையில் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பருவமழை தொடங்கிய பின் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி வலுவிழந்த நிலையிலேயே இருந்தது. இந்த ஆண்டு மழையின் அளவும் குறைந்தே இருந்த நிலையில் கடந்த வாரம் வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று தனமிழகம் மற்றும் புதுவையை நோக்கி நகர்ந்து வந்தது. இதனால பல துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றப்பட்டு , தேசிய பேரிடர் மீது குழுக்கள் அமைக்கபட்டு புயலின் தாக்கத்தை சமாளிக்க பல்வேரு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழம் நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடந்தது. இதில் பல மரங்கள் வீடுகள் சில உயிர் சேதங்களும் ஏற்பட்டுள்ளது.
பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நாய்ப்பெற்று வருகிறது. மேலும் வரும் 13ம் தேதி மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்தான அறிவிப்பில், மாண்டஸ் புயல் தீவிரம் குறைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததால் தெற்கு அந்தமான் பகுதியில் வரும் 13ம் தேதி மேலடுக்கு சுழற்சி நிகழும் இதனால் அடுத்த மொன்று நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் இன்று சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.