“திருவரங்கப் பெருமாள்” இத்திருத்தலதிற்கு சென்றால் கிடைக்கும் பலன்..?
திருச்சி என்றாலே பலருக்கும் நினைவிற்கு வருவது, உச்சி பிள்ளையார் கோவில், சமயபுரம் மாரியம்மன், ஸ்ரீரங்கம் கோவில், உட்பட சிறந்த புகழ்பெற்ற திருத்தலங்கள் என சொல்லலாம்.
ஆனால் திருச்சியில் இந்த கோவில்கள் மட்டுமல்ல திருச்சியில் எந்த மாநகரம் மற்றும் கிராமம் திரும்பினாலும் திரும்பும் பக்கம் எல்லாம் கோவில்கள் என சொல்லலாம்.
ஆனால் பக்தர்களின் வருகை திருச்சியில் மலைக்கோட்டை, ஸ்ரீ ரங்கம் போன்ற திருதலத்தில் தான் அதிகம் உள்ளது.. தமிழகத்தின் சுற்றுலா தலமாக அமைய பெற்ற சிறப்பு வாய்ந்த இடம் என சொல்லலாம்.
அப்படியாக திருச்சியில் இன்னும் நாம் சென்று சுற்றி பார்க்க வேண்டிய கோயில்கள் பட்டியல் அதிகம் உள்ளது. அங்கு வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று வழிபட நம் வாழ்க்கையில் சிறந்த மாற்றங்கள் ஏற்படும் என சொல்லப்படுகிறது.
அப்படி திருச்சி மாநகரத்தில் அமைந்து இருக்கும் புகழ் பெற்ற கோயில்களும் அதனின் வரலாற்றையும் பற்றி விரிவாக படிக்கலாம்..
ரங்கநாதசுவாமி கோவில், ஸ்ரீரங்கம் திருச்சி என்றாலே ரங்கன் தான் பிரபலம்… “அரங்கநாதனை” காண பல கோடி மக்கள் பல இடங்களில் இருந்து தினமும் வருகை புரிகின்றனர். இக்கோவிலின் இரண்டு பக்கமும் கங்கையை விட புனித ஆறான காவேரி ஆற்றினால் சூழப்பட்ட திருநாவலந்தீவு என்ற தீவு பகுதியில் அமைந்துள்ளது. இந்த வருடத்தின் அநேக நாட்களைத் திருவிழாவாக கொண்ட மிகச் சிறப்புமிக்க திருக்கோயிலாகும்.
மேலும் ஸ்ரீ ரங்கநாதநாதன் கோயில் சுமார் 156 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து சிறந்த வழிபாட்டு தலமாக தமிழ்நாட்டில் விளங்குகிறது. 236 அடி உயரமுள்ள ராஜகோபுரம் (பிரதான கோபுரம்) உலகின் மிக உயரமான கோவில் கோபுரங்களில் ஒன்று என சொல்லலாம்.
அதாவது இக்கோவிலை சுற்றி 21 கோபுரங்கள் நேர்த்தியான நுழைவாயிலுடன் அமைக்கப்பட்டுள்ளது.. உலகின் சிறந்த கோபுரமாக புகழ் பெற்ற திருத்தலங்களில் ஸ்ரீ ரங்கமும் ஒன்று..
இத்திருக்கோயிலில் பாஞ்சராத்திர ஆகமம் பாரமேஸ்வர சம்ஹிதைபடி பூசை முறைகள் நடைபெற்று வருகிறது. மேலும், இராம பிரானால் பூஜிக்கப்பட்ட திருவரங்கப் பெருமாள் விக்ரகம் எனப் பெருமை பெற்ற திருத்தலமாகும்.
கிடைக்கும் பலன் :
இத்திருத்தளத்திற்கு பெரும்பாலும் திருமணம் ஆகாதவர்கள் சென்று வழிபடு செய்கின்றனர்.. அப்படி வழிபட்டால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் ஆகும் என சொல்லுவார்கள்..
மற்றும் நாக தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்கு சென்று பூஜை செய்தால் தோஷங்கள் நீங்கி விடும் என்பது உண்மை..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..