உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
ஒன்றிய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் முன்பாக மதுரை மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது ஒன்றிய அரசுக்கு எதிராகவும், புதிய சட்டங்களை திரும்ப பெற கோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பாக வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், ஒன்றிய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்து திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்றவளாகத்தில் அனைத்து வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
அதிமுக வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன் மற்றும் குடியாத்தம் நகரச் செயலாளர் பழனி தலைமையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்தும் படத்தை செருப்பால் அடித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அதிமுகவினர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை தாலுகா குளிச்சார் சிட்கோ தொழிற்பேட்டையில் 12.56 ஏக்கர் பரப்பளவில் சிட்கோவால் 2009-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிட்கோ தொழிற்பேட்டையில் 61 தொழில்மனைகள் உள்ள நிலையில், இதுவரை 35 தொழில்சாலைகள் செயல்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அங்கு புதிதாக திறக்கப்பட்ட 2 புதிய தொழில் நிறுவனங்களை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி திறந்து வைத்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..