கலவர பூமியாக மாறிய மேற்குவங்கம்..! உள்ளாட்சி தேர்தலில் 4 பேர் சுட்டு கொலை..!!
கடந்த 1970ம் ஆண்டு மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு நடந்த மேற்கு வங்க ஊரக உள்ளாட்சி தேர்தலில் 90 சதவிகித இடங்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஊராட்சி தலைவர்களும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
அதில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு 5 ஆண்டு பதவியை ஏற்று மக்களுக்கு பணியாற்றி வந்த நிலையில் ஐந்து ஆண்டு பதவியானது இந்த ஆண்டுடன் முடிவடைய இருந்த நிலையில் ஜூலை 8ம் தேதி மேற்கு வங்கம் மாநிலத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவிப்பை வெளியிட்டது.
இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், இடது சாரிகள், காங்கிரஸ் மற்றும் பாஜக என பல கட்சிகள் தேர்தலில் நின்றுள்ளனர். ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அம்மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.
தேர்தல் பரப்புரைகளின் போது கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில் 18 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். பல கலவரங்கள் தாண்டி இன்று தேர்தல் நடைபெற இருப்பதால், அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. அதற்காக பல பலத்த பாதுகாப்புடன் தேர்தல் தொடங்கியது.
65,000 துணை ராணுவ படையினர் இதை ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். மேலும் மாநில காவல் துறையினர் சார்பில் 70 ஆயிரம் போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் செயல் பட்டுள்ளனர். வாக்குப்பதிவு தொடங்கிய சில மணிநேரத்திலேய கூச்பெகார் மாவட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.
ஒரு சிலர் வாக்கு பெட்டிகளை தூக்கிகொண்டு சென்று உடைத்துள்ளனர். மேலும் சில வாக்குச்சாவடி களுக்கு தீயும் வைத்துள்ளனர். இந்த சம்பவம் மேற்கு வங்கம் மாநில செய்திகளில் லைவில் காட்டுவதால் மக்கள் வாக்களிக்க செல்ல அஞ்சுவதாக தெரிவித்துள்ளனர்.
ரெஜிநகர், துஃபான்கஞ்ச், கர்கிராம் ஆகிய பகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. தொம்கோல் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்துவதாகவும் திரிமூணால் காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.
மேலும் இதற்கு காரணம் பாஜக, காங்கிரஸ், மற்றும் மார்கிஸ்ட் கட்சியினர் கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தல் நடக்க விடாமல் செய்கின்றனர் எனவும் திரிமூணால் காங்கிரஸ் கட்சியினர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளனர். மேலும் பல குற்றச்சாட்டு களையும் முன் வைத்துள்ளனர்.
தேர்தல் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு உள்ள மத்திய படைகள் என்ன செய்கின்றன எனவும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மக்களுக்கு வாக்குச்சாவடி களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மத்திய படையினர் தோல்வி அடைந்து விட்டனர். எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் பிர்கச்சா என்ற பகுதியில் சுயேட்சை வேட்பாளரின் பூத் ஏஜெண்ட் அப்துல்லா என்பவர் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் முன்னா பிபியின் ஆதரவாளர்கள் கொல்லப்பட்டதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு சில பொதுமக்கள் டயர்கள் எரித்து கடைகள் உடைத்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் மேற்குவங்கம் மாநிலத்தையே பதற்ற நிலைக்கு ஆளாக்கியுள்ளது. மேலும் தேர்தல் நடக்குமா என்றும் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.