ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரனில் தரையிறங்கும் சந்திராயன் 3 விண்கலம்..!! இஸ்ரோ வெளியிட்ட தகவல்..!!
இந்திய நாடே மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கும் நிலவு திட்டமான சந்திராயன் -3 விண்கலம் வருகிற ஜூலை 14ம் தேதி அன்று மதியம் 2:35 மணிக்கு ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து அனுப்பப்படுகிறது. இந்த தகவலை நேற்று இஸ்ரோ ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜி-20 விண்வெளி பொருளாதார தலைவர்கள் கூட்டத்திற்கு பிறகு, இதுகுறித்து இஸ்ரோ தலைவர் எம்.சோம்நாத் பேசியுள்ளார்.
சந்திராயன் 3 விண்கலம் ஏவுகணையானது , மார்க் III (எல்.வி.எம் 3 ) மூலம் அனுப்பப்படும். அதற்காக ஜூலை 12ம் தேதியில் இருந்து ஜூலை 19ம் தேதிக்குள் இடைப்பட்ட காலக்கெடு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. சந்திராயன் 2க்கு பிறகு சந்திராயன் -3 என்பது இந்தியாவின் மூன்றாவது நிலவு பணி.
இது சந்திரனின் மேற்பரப்பில் பாதுகாப்பாக தரை இறங்குவதற்கும், உலாவுவதற்கும் இறுதி வரை தனது திறனை இந்த விண்கலம் வெளிப்படுத்தும். சந்திராயன் -3 உள்நாட்டிலேயே தரையிறங்கும் தொகுதி உந்துவிசை தொகுதி மற்றும் கிரங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு தேவையான புதிய தொழில் நுட்பம் உருவாக்கும் மற்றும் நிரூபிக்கும் நோக்கத்துடன் ஒரு ரோவர் போன்றவற்றை கொண்டுள்ளது.
இஸ்ரோ வெளியிட்டுள்ள தகவலின் படி லேண்டர், ஒரு குறிப்பிட்ட சந்திர தளத்தில் மென்மையாக தரையிறங்கும் மற்றும் ரோவரை நிலை நிறுத்தும் திறன் கொண்டுள்ளது.
இஸ்ரோ வெளியிட்டுள்ள தகவலின் படி, லேண்டர் ஒரு குறிப்பிட்ட சந்திர தளத்தில் மென்மையாக தரையிறங்கும் மற்றும் ரோவோரை தலைநிறுத்தும் திறன் கொண்டுள்ளது. இது அதன் இயக்கத்தின் போது சந்திரனின் மேற்பரப்பில் உள்ள இடத்திலேயே ரசாயன பகுப்பாய்வை மேற்கொள்ளும்.
நிலவின் மேற்பரப்பில் சோதனைகளை மேற்கொள்ளும் வகையிலும் லேண்டர் மற்றும் ரோவரில் அறிவியல் தரவு வசதிகளையும் கொண்டுள்ளது.
எனவே திட்டமிட்ட படி ஜூலை 14ம் தேதி சந்திராயன் 3 விண்கலம் அனுப்ப பட்டால் வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி அல்லது 24ம் தேதி சந்திரன் விண்கலத்தின் மேற்பரப்பில் தரை இறங்கும். சந்திரனில் சூரிய உதயம் இருக்கும் பொழுது விண்கலம் தரையிறங்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் லேண்டரும், ரோவரும் சூரிய ஒளி இருக்கும் வரை அங்கேயே இருக்கும் அதாவது 14 நாட்கள் நிலவில் இருக்கும் சூரிய ஒளி இல்லாதபோது ரோவரில் இருக்கும் ஒரு சிறிய சோலார் பேனல் அடுத்த 14 நாட்கள் நிலவில் இருப்பதால் அதற்கு தேவையான அளவிற்கு பேட்டரியை சார்ஜ் செய்துக்கொள்ளும் சக்தியை கொண்டுள்ளது.
அங்குள்ள வெப்பநிலை மைனஸ் 40 டிகிரிக்கு கீழ் செல்லும், அந்த சமையத்தில் பேட்டரி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் தொடர்ந்து செயல்படும் என்பதற்கான எந்த உத்திரவாதமும் கிடையாது, ஆனால் அதற்கான சோதனையும் நாங்கள் செய்தோம், கடுமையான சூழலிலும் பேட்டரி சார்ஜ் செய்து கொள்வதற்கான வழிமுறைகள் கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் கூறியுள்ளார்.
Discussion about this post