ரேஷன் கடையில் இருந்து மளிகைபொருட்கள் இனி வீட்டுக்கே டெலிவரி..!! மகிழ்ச்சியில் மக்கள்..!!
ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளிகள் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என அமைச்சர் பெரிய கருப்பன் சமீபத்தில் கூறியிருந்தார். அதன் படி அதை செய்தும் காட்டினார்.
அதுபோல ரேஷன் கடைகளில் எண்ணற்ற சிறப்பு அம்சங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியிட்டு வருகின்றனர்.., அதுகுறித்து நேற்று முன்தினம் ஒரு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. அதன்படி, கூட்டுறவு நிறுவனங்களில் தயாரிக்கப்படும் பொருட்களை எளிதாக சந்தைக்கு கொண்டு வந்து, பொது மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் கூட்டுறவு சந்தை (CO-OP -Bazar ) என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம் 64 வகையான பொருட்கள் பட்டியலிடப் பட்டுள்ளது. ஆர்டர் செய்த பின் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு இருக்கும் இடத்திற்கே உணவு பொருட்கள் டெலிவரி செய்யப்படும் என அறிவிக்கை வெளியாகியுள்ளது.
வீட்டிற்கு 64 வகையான மளிகை பொருட்கள் வந்து சேரும் என்ற அறிக்கை வெளியான நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டுறவு வங்கி அறிக்கை :
இந்நிலையில் அடுத்த அதிரடியை மத்திய கூட்டுறவு துறை வெளியிட்டுள்ளது. எதாவது கூட்டுறவு துறையின் கீழ் மாநில தலைமை கூட்டுறவு வங்கி 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், 128 நகர கூட்டுறவு 4453 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல் படுகின்றன. அவற்றில் பயிறு கடன், நகைக்கடன் உட்பட 17 வகையான கடன்கள் வழங்கப்படும். தனியாருக்கு இணையாக இணையதள வங்கி சேவைகள் உள்ளிட்ட, டிஜிட்டல் சேவைகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளிலும் கிடைக்கின்றன.
ஆனால் கிராமங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் இருப்போருக்கு வங்கி கணக்குகள் இருந்தும் கூட, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கவும் டெப்போசீட் செய்யவும் முடியாமல் தவிக்கின்றனர். மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, வங்கிக்காக அதிக தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அது மலை பகுதி மக்களுக்கு சிரமம் கொடுப்பது மட்டுமின்றி பணம் செலுத்த முடியாமல் போகும் நிலையம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்காக தமிழக அரசு மொபைல் பேங்க் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
மொபைல் பேங்க் :
வங்கி சேவைகள் எளிதாக கிடைக்க வேண்டும் என்பதற்காக கூட்டுறவு துறை சார்பில், “நகரும் கூட்டுறவு வங்கி” என்ற பெயரில் வீட்டிற்கு அருகிலேயே வங்கி சேவை அளிக்கும் வசதியை விரிவு படுத்த இருப்பதாக கூறியுள்ளது.
தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் சார்பில் 32 வாகனங்கள் வாயிலாக இந்த மொபைல் பேங்க், நகரும் கூட்டுறவு சேவையை தொடங்கியுள்ளது. இந்த மொபைல் வாகனத்தில் சிறிய அளவிலான ஏடிஎம் மிஷின் பொருத்தப் பட்டிருக்கும்.
அதன் மூலம் இவர்கள் பணம் செலுத்துவது, மற்றும் பணம் எடுப்பது போன்ற செயல்கள் செய்துக்கொள்ளலாம் என பணம் எடுக்க அல்லது பணம் செலுத்த தெரியவில்லை என்றால், வங்கி ஊழியர் ஒருவர் அந்த வாகனத்தில் இருப்பார்.., வங்கி விவரம் பற்றி தெரியாதவர்களுக்கு உதவும் முன் அவர்களின் கைரேகை எடுத்துக்கொள்வார் பின் ஆதார் என் சரி பார்த்து விட்டு உதவுவார்.
வாடிக்கையாளர்கள் :
இந்த மொபைல் வங்கி குறித்து கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர், வங்கி இல்லாத இடங்களை கண்டறிந்து இந்த நகரும் மொபைல் ஏ.டி.எம் கொண்டு வந்துள்ளோம். அதில் பணம் எடுப்பது, பணம் செலுத்துவது மற்றும் அக்கவுண்டில் எவ்வளவும் பணம் இருக்கிறது என தெரிந்துக் கொள்ள முடியும். மேலும் வேறு ஒரு புதிய வங்கி அக்கவுண்ட் தொடங்கவும் முடியும்.
அனைத்து மாவட்டங்களிலும் கூடுதலாக 4-5 வாகனங்கள் வாயிலாக வீடுகளுக்கு அருகில் வங்கி சேவை தொடங்கப்பட்டு உள்ளது. ஒரு நகரும் வங்கிக்கு 16 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.., இதனால் புதிய வாடிக்கையாளர்களையும் சேர்க்க முடியும். இதை தவிர 750 தொடக்க வேளாண்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள், ரேஷன் கடைகளில் சிறிய ஏ.டி.எம் வாயிலாக பயிர்களுடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
Discussion about this post